40 பந்தில் 100 ரன்.. விராட் கோலி சம்பவம் பண்ண போறார்.. சௌரவ் கங்குலி நம்பிக்கை

உலகக்கோப்பை டி20 தொடர் நெருங்கி வரும் வேளையில், பிசிசிஐயின் முன்னால் தலைவர் சௌரவ் கங்குலி விராட் கோலி டி20 உலக கோப்பையில் குறைந்த பந்துகளில் சதம் அடிப்பார் என்று கூறியுள்ளார்.

- Advertisement -

2024 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற உள்ளது.இதற்காக இரு நாடுகளிலும் மைதானங்கள் தற்போது மிகத் தீவிரமாக தயார்படுத்தப்பட்டு வருகின்றன.

- Advertisement -

டி20 உலக கோப்பைக்காண இந்திய அணி மே மாத தொடக்கத்தில் பிசிசிஐ அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஒரு சில வீரர்களின் பெயர்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டு இருக்கின்றன. இந்த டி20 உலக கோப்பை இந்திய அணியை ரோகித் சர்மா வழி நடத்துவார் என்று ஜெய்சா ஏற்கனவே அறிவித்திருந்தார்.

- Advertisement -

இதன்படி மற்ற வீரர்களின் பட்டியல் சிறிது நாட்களில் வெளிவரும். இந்த நிலையில் ரோஹித் சர்மா உடன் தொடக்க ஆட்டக்காரராக விராட் கோலி களமிறங்குவார் என்று சமீபத்தில் செய்திகள் வலம் வந்தன. ஆனால் இந்த தகவலை இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா நான் அல்லது ராகுல் டிராவிட் கூறும் வரை வரும் தகவலை நம்ப வேண்டாம் என்று கூறி இருந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் சௌரவ் கங்குலி விராட் கோலி தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவதை பார்க்க எனக்கும் ஆசை இருக்கிறது என்று சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கூறியிருக்கிறார். இது குறித்து அவர் கூறும் பொழுது
” உலக கோப்பை டி20 தொடரில் இந்திய அணிக்காக விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாயர் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கி விளையாட வேண்டும்.

- Advertisement -

அப்போதுதான் இந்திய அணிக்கு நல்ல ஓபனிங் நிச்சயமாக கிடைக்கும். விராட் கோலி ஒரு முனையில் நிலைத்து நின்று விளையாடினால், மறுமுனையில் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடுவார். அதேபோல விராட் கோலியின் பேட்டிங் இந்த உலகக் கோப்பை தொடரில் மிகவும் நன்றாக இருக்கும். 40 பந்துகளில் விராட் கோலி கண்டிப்பாக சதம் அடிப்பார் என்று நம்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க:நோ-பால் சர்ச்சை.. விராட் கோலிக்கு 50 சதவீதம் அபராதம் விதித்தது பிசிசிஐ.. கோபத்தில் ரசிகர்கள்.. காரணம் என்ன?

விராட் கோலிக்கும், கங்குலிக்கும் சிறிய மனக்கசப்பு தொடர்ந்து வந்த நிலையில் தற்போது கங்குலியே விராட் கோலி பற்றி பேசி இருப்பது ரசிகர்களிடம் உற்சாகத்தை அதிகரித்துள்ளது. மேலும் விராட் கோலி தொடக்க ஆட்டக்காரராக ரோஹித் சர்மா உடன் களமிறங்க வேண்டும் என்பதே ரசிகர்களும் விரும்புகிறார்கள். உலகக்கோப்பை தொடரில் பங்கு பெற இந்திய அணியிம் இளம் வீரர்களும் போட்டி போட்டுக் கொண்டு தங்கள் திறமையை நிரூபித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles