நேற்று நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததை தொடர்ந்து அணியின் வீரர் விராட் கோலிக்கு போட்டி கட்டணத்திலிருந்து 50 சதவீதம் அபராதம் பிசிசிஐ விதித்துள்ளது.
கொல்கத்தா மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் குவித்தது. பின்னர் வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய பெங்களூர் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவி இந்த ஐபிஎல் தொடரில் தனது ஆறாவது தோல்வியை பதிவு செய்தது.
99 சதவீதம் பிளே ஆப் சுற்றில் இருந்து பெங்களூர் அணி வெளியேறி விட்டது என்று தான் சொல்ல வேண்டும். இனி பெங்களூர் அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்ல வேண்டும் என்றால் மீதமுள்ள போட்டிகளில் கட்டாயம் வெற்றி பெற்று மற்ற அணிகளின் ரன் ரேட் விகிதத்தை பொறுத்து இறுதியில் முடிவு செய்யப்படும்.
ஆனால் மற்ற ஒன்பது அணிகளும் பிளே ஆப் சுற்றுக்குச் செல்ல மிகத் தீவிரமாக போட்டி போட்டு வருவதால் பெங்களூர் அணிக்கு இது நெருக்கடியாவே பார்க்கப்படும். இந்த நிலையில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது இடுப்புக்கு மேலே வந்த பந்தை அடிக்க முயற்சிக்க பந்து பேட்டில் பட்டு கேட்ச் ஆனது.
இடுப்புக்கு மேலே வந்த பந்து நோ-பால் என்று அறிவிக்கப்படும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த வேளையில் விராட் கோலி ஃக்ரீசை விட்டு வெளியே வந்ததால் அது நோ-பல் இல்லை என்று அறிவிக்கப்பட்டு விராட் கோலிக்கு அவுட் கொடுக்கப்பட்டது. இதை எதிர்பார்க்காத விராட் கோலி கோபத்தில் நடுவருடன் அங்கே நின்று சிறிது நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அதற்குப் பின்னர் பெவிலியினை நோக்கி திரும்பினார்.
இந்த விஷயம் நேற்று சர்ச்சையானது தொடர்ந்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அது விராட் கோலிக்கு அவுட் இல்லை என்று விராட் கோலிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர்.இந்த நிலையில் ஐபிஎல் விதிமுறையை மீறியதற்காக நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் விராட் கோலிக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 50 சதவீதத்தை அபராதமாக இந்திய கிரிக்கெட் வாரியம் விதித்துள்ளது.
இதையும் படிங்க:ஹர்திக் பாண்டியா மீம்ஸ்களால் பாதிக்கப்பட்டுள்ளார்.. இவ்வளவு வன்மத்தைக் கக்கக் கூடாது.. ராபின் உத்தப்பா கருத்து
விராட் கோலிக்கு கொடுக்கப்பட்டது முதலில் அவுட்டே இல்லை என்று அனைவரும் கூறிவரும் நிலையில், தற்போது விதிக்கப்பட்ட கட்டணம் விராட் கோலியின் ரசிகர்களிடையே கோபத்தை தூண்டி உள்ளது.

