தோனிக்கு எதிரா நான் பந்தயமே கட்ட மாட்டேன்.. அவர் தலைமையில் சிஎஸ்கே பிளே ஆப் போக இன்னும் வாய்ப்பிருக்கு – வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் பேட்டி

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 போட்டிகளில் விளையாடி இருக்கும் நிலையில் 2 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று கிட்டத்தட்ட பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்திருக்கிறது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கிரிக்கெட் வீரர் பிஷப் எம்எஸ் தோனி குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சொந்த மண்ணில் அதிக வெற்றிகளை பெற்ற ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வகையில் மூன்று உலக தரமான சுழற் பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கியது. ஆனால் சிஎஸ்கேவின் திட்டத்திற்கு ஏற்ப சுழற் பந்து வீச்சாளர்களின் செயல்பாடு அணிக்கு சரியாக கை கொடுக்காத நிலையில் இன்னும் அதிகமான தோல்விகளை சந்தித்து. இந்த நிலையில் ஐந்தாவது போட்டிக்கு முன்பாக சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் காயம் அடைந்து வெளியேற, அவருக்கு பதிலாக எம்எஸ் தோனி கேப்டனாக பொறுப்பேற்றார்.

- Advertisement -

முதல் போட்டியில் தோல்வியடைந்தாலும் அதற்கு அடுத்த லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற நிலையில் மீண்டும் சென்னை அணி வெற்றி பாதைக்குத் திரும்பியுள்ளது. இந்த சூழ்நிலையில் எம்எஸ் தோனி கேப்டனாக பொறுப்பேற்றும் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்த போது தோனி கைகளில் ஒன்றும் மந்திரக்கோல் இல்லை அவரும் சாதாரண மனிதர் தான். எனவே தோல்விகளுக்கு ஒன்றும் செய்ய முடியாது என்று பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்மிங் கூறினார்.

ஆனால் அதற்கு அடுத்த போட்டியின் மூலமாக சிஎஸ்கே வெற்றி பெற்று தான் அந்த இரண்டாவது வெற்றியை பதிவு செய்திருக்கும் நிலையில் இன்னும் ஏழு போட்டிகளில் ஆறு போட்டிகள் வெற்றி பெற்றால் சிஎஸ்கே அடுத்த சுற்றுக்கு முன்னேறி விடும். ஏற்கனவே 2010 ஆம் ஆண்டு சிஎஸ்கே இதே முறையில் இரண்டாம் பாதியில் அதிக வெற்றிகளை பெற்றதது தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இயான் பிஷப் இது குறித்து சில விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க:20 ரன்கள்.. வான்கடே பிட்ச் மாதிரி தெரியவில்லை.. பேட்டிங் செய்வதே கஷ்டம்.. பேட் கம்மின்ஸ் சோகம்

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியுமா? என்று கேட்கிறீர்கள் தோனி தலைமை தாங்கும் எந்த அணியையும் நான் விரைவாக முடிவுரை கூற மாட்டேன். என்னதான் பிளம்மிங் தோனி ஒன்றும் மாயாஜாலக்காரர் இல்லை என்றாலும் அவர் களத்தில் இறங்கினால் நிச்சயம் மாயாஜாலங்களை நிகழ்த்தக்கூடியவர் தான். எனவே தோனிக்கு எதிராக நான் என்றைக்குமே பந்தயம் கட்ட மாட்டேன்” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles