20 ரன்கள்.. வான்கடே பிட்ச் மாதிரி தெரியவில்லை.. பேட்டிங் செய்வதே கஷ்டம்.. பேட் கம்மின்ஸ் சோகம்

ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்று இருக்கிறது. இந்த போட்டியில் முதல் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்களை சேர்த்தது. இதன்பின் களமிறங்கிய மும்பை அணி 18.1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்து வென்றது.

- Advertisement -

இதன் மூலமாக ஐதராபாத் அணி இதுவரை ஆடிய 7 போட்டிகளில் 2 வெற்றி, 5 தோல்வி உடன் புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகள் பெற்று 9வது இடத்தில் உள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கான ஒளி இன்னும் இருந்தாலும், அடுத்து வரும் 7 போட்டிகளில் 6ல் வென்றால் மட்டுமே எளிதாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலை உருவாகி இருக்கிறது.

- Advertisement -

பேட்டிங் சொதப்பல்

இந்த தோல்விக்கு பின் ஐதராபாத் அணியின் கேப்டன் கம்மின்ஸ் பேசும் போது, வான்கடே மைதானத்தில் இந்த பிட்ச் பேட்டிங் செய்வதற்கு எளிதாக இல்லை. நாங்கள் பேட்டிங்கில் 20 ரன்களுக்கு மேல் குறைவாக சேர்த்துவிட்டோம். இந்த பிட்ச் கொஞ்சம் வித்தியாசமானதாக அமைந்தது. மும்பை பிட்ச் வழக்கமாக இப்படி இருக்காது. பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும்.

- Advertisement -

அதேபோல் மும்பை அணியும் சிறப்பாக பவுலிங் செய்தார்கள். நாங்கள் ஷாட்களை அடிக்கக் கூடிய திசைகளை சிறப்பாக தடுத்தனர். எங்கள் அணியில் அனைத்து அடிப்படைகளும் சரியாக இருப்பதாக நினைத்தோம். ஆனால் 160 ரன்கள் என்பது நிச்சயம் குறைந்த இலக்கு தான். ஆனால் பவுலிங்கில் சிறப்பாக போராடினோம்.

விக்கெட் கிடைக்கவில்லை

விக்கெட்டுகளை விரைந்து வீழ்த்த நினைத்தோம். ஆனால் டெத் ஓவர்களில் அதிகமாக கிடைத்தது. இம்பேக்ட் பிளேயரால் எப்போதும் 1 அல்லது 2 ஓவர்களை தான் வீச முடியும். அதன் காரணமாகவே ராகுல் சஹரை அழைத்தோம். ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல வேண்டுமென்றால், அந்நிய மண்ணிலும் வெல்ல வேண்டிய. ஆனால் இம்முறை எங்களுக்கு நாங்கள் நினைத்து போல் அமையவில்லை.

- Advertisement -

அடுத்த போட்டிக்கு முன்பாக சிறிய பிரேக் கிடைத்துள்ளது. ஒவ்வொரு போட்டிக்கு முன்பாகவும் பிட்ச் மற்றும் சூழலை பயன்படுத்த ஆலோசிப்போம். எங்களின் அணியின் பவர் பிளே பேட்டிங் சரியாக இருந்தது. அதிரடியாக ஆடவில்லை. அடுத்த போட்டி எங்கள் மண்ணில் நடக்கிறது. அங்கு எப்படி இருக்கும் என்று நன்றாக தெரியும் என்று கூறியுள்ளார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles