பும்ராவுக்கு எதிரா அடங்கிதான் போகணும்.. குறிப்பா இந்த விஷயத்தை செய்யவே கூடாது – ஆஸி சைமன் கேடிச் பேட்டி

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்னும் சில தினங்களில் நடைபெற உள்ளது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் சைமன் கேடிச் பும்ராவின் பந்துவீச்சை எப்படி எதிர்கொண்டு விளையாட வேண்டும் என்று சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளராக திகழும் பும்ரா ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்களுக்கு எதிராக சிம்ம சொப்பனமாக விளங்குகிறார். இதுவரை ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் அவர் மட்டுமே 21 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறவும், மூன்றாவது ரெஸ்ட் போட்டியில் டிரா செய்யவும் இவரது பந்துவீச்சு இந்திய அணிக்கு மிக முக்கியமாக அமைந்துள்ளது.

- Advertisement -

அது மட்டுமல்லாமல் இவரை பின்பற்றி பின்னால் வரும் இந்திய பந்துவீச்சாளர்கள் தங்களால் முடிந்த அளவு சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்த இந்திய அணி தற்போது பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டு துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தற்போது இந்தத் தொடர் இரண்டு அணிகளுக்கும் சமமாக இருக்கும் நிலையில் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் சைமன் கேடிச் பும்ராவின் பந்து வீச்சை எப்படி எதிர் கொண்டு விளையாட வேண்டும் என்று சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் விரிவாகக் கூறும்போது “உங்களது செயல்முறைகள் மற்றும் எண்ணங்கள் ஆகியவை நேர்மறையாக இருப்பது நல்ல விஷயம் தான். இது அணிக்கும் மிகத் தேவையான ஒன்றாக இருக்கிறது. ஆனால் இந்திய பந்துவீச்சாளர் பும்ரா விஷயத்திலும் இதே நேர்மறை எண்ணம் அவரது பந்துவீச்சில் பௌண்டரி அடிப்பதில் இருக்கக் கூடாது. ஏனென்றால் அவர் பல மோசமான பந்துகளை வீசுவதில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். உங்களுடைய முதன்மையான நோக்கம் எதுவாக இருக்க வேண்டும் என்றால் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து விளையாடுவதிலும், டிபென்ஸ் செய்து விளையாடுவதிலும் மட்டுமே இருக்க வேண்டும்.

- Advertisement -

இதையும் படிங்க:மறைக்க விரும்பல.. உண்மையில் நாங்க 13 வயசு பையனை கோடி ரூபாய்க்கு.. வாங்க காரணமே வேற.. சென்னையில் அப்படி ஒரு சம்பவம் நடந்துச்சு.. சஞ்சு சாம்சன் பேட்டி

இங்குதான் பும்ரா மிகப்பெரிய சவாலாக இருக்கிறார். நீங்கள் அவருக்கு எதிராக ஆஃப் லெந்தில் எந்தவிதமான பௌண்டரியும் அடிக்க முடியாது. ஏனென்றால் அவர் ஒரு மிகச் சிறந்த பவுலர். உலகின் பல கிரிக்கெட் வீரர்களால் அவரை எதிர்த்து விளையாட முடியவில்லை. எனவே நீங்கள் உங்களது விக்கெட்டை தற்காத்து அதற்கு தகுந்தவாறு விளையாட வேண்டும்” என்று சைமன் கேடிச் கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles