இந்தியாவுல 2 விராட் கோலி இருக்காங்க.. எல்லா பிட்ச்லயும் இவர் அசத்துறாரு.. கூறுகிறார் சோயப் மாலிக்

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் இந்திய அணி, சூப்பர் 8 சுற்றிலும் தனது முதல் வெற்றியை பெற்றிருக்கிறது. இது இந்திய அணிக்கு தொடர்ச்சியாக நான்காவது வெற்றியாகும்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இந்திய அணியில் இரண்டு விராட் கோலி இருப்பதாகவும், எல்லா சூழ்நிலைகளிலும் இவர் திறமையான பங்களிப்பை வெளிப்படுத்தி வருகிறார் என்றும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயப் மாலிக் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்தியா தற்போது பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் என அனைத்து துறைகளிலும் அசத்தி வருகிறது. பேட்டிங்கை பொருத்தவரை ரிஷப் பண்ட், சூரியகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் தொடர்ச்சியாக பேட்டிங்கில் கலக்கி வருகிறார்கள். பந்துவீச்சை பொறுத்தவரை அனைவரும் சிறப்பாக வீசினாலும் அதில் குறிப்பாக பும்ரா உலக தரத்தில் பந்து வீசி வருகிறார். எப்போது இக்கட்டான சூழ்நிலைகளில் கேப்டன் ரோஹித் சர்மா பந்தை பும்ராவிடம் கொடுக்கிறாரோ அப்போதெல்லாம் விக்கெட் வீழ்த்தி இந்திய அணி காப்பாற்றுகிறார்.

- Advertisement -

மேலும் ரன்களையும் அவ்வளவு எளிதில் விட்டு தருவதில்லை. டி20 கிரிக்கெட்டில் குறைந்த ரன்கள் எக்கானமியை வைத்திருக்கும் ஒரே பவுலர் இந்திய வீரர் பும்ரா மட்டுமே. அதனால்தான் கிரிக்கெட்டில் தற்போது நம்பர் ஒன் பந்துவீச்சாளராக திகழ்ந்து கொண்டிருக்கிறார். பாகிஸ்தான் அணிக்கு எதிராக சிறப்பாக பந்து வீசி மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தியதோடு மட்டுமல்லாமல், நேற்று நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் மூன்று விக்கெட்டுகள் மிகப்பெரிய திருப்புமுனை ஏற்படுத்தி கொடுத்தார்.

இதனால் பும்ராவை பந்துவீச்சின் விராட் கோலி என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயப் மாலிக் கூறியிருக்கிறார். இதுகுறித்து மாலிக் விரிவாக கூறும்பொழுது ” விராட் கோலி பல வருடங்களாகவே இந்திய அணிக்கு சிறப்பாக செயல்பட்டு போட்டியை வென்று கொடுக்கிறார். இதே போல நான் பும்ராவை பந்துவீச்சின் விராட் கோலி என்று கூறுவேன். ஒவ்வொரு சூழ்நிலையிலும் அசத்தி வரும் அவரது பந்துவீச்சு திறமையை குறித்து நாம் பேசி வருகிறோம்.

- Advertisement -

புதிய பந்து மட்டுமல்லாமல் பழைய பந்திலும் அவர் மெதுவாக வீசும் திறமை கொண்டவராக இருக்கிறார். டி20 கிரிக்கெட் மட்டுமின்றி மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் பும்ரா அசத்தி வருகிறார். குறிப்பாக பும்ரா ஐசிசி தொடர்களில் அவரது பார்ம் இழந்ததாக தெரியவில்லை. ஒவ்வொரு ஐசிசி தொடரிலும் மிகச் சிறப்பாக பந்து வீசி வருகிறார்.

இதையும் படிங்க:மனுஷன் என்னமா பந்து வீசுறாரு.. ஒரு விளையாட்டை இவ்வளவு அழகா செட் பண்ணி நான் யாரையுமே பார்க்கல.. பதான் புகழாரம்

அவர் குறிப்பாக எந்த பேட்ஸ்மேனிடமும் அடி வாங்குவதில்லை. எல்லாவிதமான சூழ்நிலைகளிலும் எல்லாவிதமான ஆடுகளங்களிலும் அவர் அசத்தக்கூடிய வீரராக இருக்கிறார் என்று மாலிக் கூறி இருக்கிறார். ஏற்கனவே பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்கள் பும்ரா பற்றி புகழ்ந்து பேசி வரும் நிலையில் தற்போது சோயப் மாலிக்கும் பாராட்டி பேசி இருக்கிறார். இந்திய அணி தனது அடுத்த போட்டியில் நாளை வங்கதேச அணியை எதிர்கொள்ள உள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles