மனுஷன் என்னமா பந்து வீசுறாரு.. ஒரு விளையாட்டை இவ்வளவு அழகா செட் பண்ணி நான் யாரையுமே பார்க்கல.. பதான் புகழாரம்

நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 உலக கோப்பை சூப்பர் 8 சுற்றில் பும்ராவின் அபாரமான பந்து வீச்சால் இந்திய அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த வெற்றிக்கு சிறப்பாக செயல்பட்ட இந்திய அணியின் பந்துவீச்சாளர் ஆன பும்ராவை முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் இர்பான் பதான் வெகுவாக பாராட்டி பேசியிருக்கிறார்.

- Advertisement -

பும்ரா கடந்த வருடம் காயத்தில் இருந்து மீண்டு வந்து இந்திய அணிக்குள் திரும்பவும் நுழைந்தார். அப்போதிருந்து அவரது பந்துவீச்சில் நிறைய வேரியேஷன்கள் தென்பட்டன. யார்க்கர் பந்துகளை மட்டுமே நம்பி வீசாமல் ஆட்டத்தின் சூழ்நிலைக்குத் தகுந்தவாறு பந்துவீச்சில் மாற்றங்களை கொண்டு வந்தார். மெதுவாக வீசுவது, லைன் அண்ட் லென்த்தை துல்லியமாக கணக்கிட்டு அதற்கேற்றவாறு ஸ்டம்புகளை அடிப்பது என ஒவ்வொரு பந்திலும் தனது வேரியேஷன்களை காட்ட ஆரம்பித்திருக்கிறார்.

- Advertisement -

குறிப்பாக ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் மற்ற பந்துவீச்சாளர்களை எதிரணியினர் அடிக்கும் போது பும்ராவின் பந்துவீச்சை மட்டும் கவனமாக எதிர்கொண்டு விளையாடுவார்கள். அந்த அளவுக்கு தனது பந்துவீச்சில் ஒரு அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறார் பும்ரா. அதைத்தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும் டி20 உலக கோப்பையிலும் தனது மிகச் சிறந்த பங்களிப்பினை இந்திய அணிக்கு வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

அதிலும் குறிப்பாக லீக் தொடரில் முன்னணி அணியான பாகிஸ்தான் அணிக்கு எதிராக இவர் வீழ்த்திய மூன்று விக்கெட்டுகள் இவரின் தனித்துவமான பந்துவீச்சை இன்னமும் வெளிகாட்டியது. நேற்று நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான சூப்பர் 8 போட்டியிலும் சிறப்பாக விளையாடிய பும்ரா நான்கு ஓவர்களில் ஒரு ஓவர் மெய்டனுடன் ஏழு ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று முக்கிய விக்கெட்டடுகளை வீழ்த்தினார்.

- Advertisement -

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் பேகப்பந்துவீச்சாளரான இர்ஃபான் பதான் பும்ரா குறித்து கூறும் பொழுது ” பும்ரா ஒரு ரிசர்வ் பேங்க் போல் செயல்படுகிறார். எப்போதெல்லாம் பந்து அவர் கையில் கொடுக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் சிக்கனமாக பந்து வீசி வருகிறார். இந்தப் போட்டியில் அர்ஷிதீப் சிங் முதல் ஓவரில் 12 ரன்கள் விட்டுக் கொடுத்தார். ஆனால் இரண்டாவது ஓவரில் பும்ரா உள்ளே வந்ததும், ஆட்டத்தினை அப்படியே மாற்றி அமைத்தார். அவர் விக்கெட் வீழ்த்திய விதம் மற்றும் வெவ்வேறு இடங்களில் பந்து வீசியது என ஒவ்வொரு பந்திலும் வித்தியாசத்தை காட்டினார்.

இதையும் படிங்க:உண்மைய சொன்னா நாங்க ஜெயிச்சு இருக்கணும்.. எங்களால இத அடிச்சிருக்க முடியும்.. ஆனா இங்கதான் தோத்தோம்.. ரஷீத்கான் பேட்டி

உலகத்தில் பும்ராவை தவிர ஒரு விளையாட்டை இவ்வளவு அழகாக யாரும் செட் செய்து நான் பார்த்ததில்லை. மேலும் நல்ல லைன் அண்ட் லென்த்தில் அருமையாக வீசுகிறார். அவரது பந்துவீச்சில் மெதுவான பந்துகளும் இருக்கும். தேவைப்படும்போது அதில் பவுன்சரும் இருக்கும். இந்த உலகக் கோப்பையில் முக்கியமாக இருக்கும் விஷயம் ரிவர்ஸ்விங். அது பும்ரா பந்து வீசும் போது பார்ப்பீர்கள்” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles