உண்மைய சொன்னா நாங்க ஜெயிச்சு இருக்கணும்.. எங்களால இத அடிச்சிருக்க முடியும்.. ஆனா இங்கதான் தோத்தோம்.. ரஷீத்கான் பேட்டி

டி20 உலக கோப்பையில் சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் விளையாடிய போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

- Advertisement -

இந்த தோல்விக்கான முக்கிய காரணங்கள் குறித்து கேப்டன் ரஷீத் கான் சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

இந்த போட்டியில் டாசை இழந்த ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்து வீசியது. தொடக்கத்தில் ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தினாலும், மிடில் ஆர்டரில் சூரியகுமார் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார். 28 பந்துகளில் 53 ரன்கள் குவித்த சூரியகுமார் யாதவ், அவருக்கு ஜோடியாக ஹர்திக் பாண்டியாவும் 24 பந்துகளில் 32 ரன்கள் குவித்தார். 60 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடியை ஆப்கானிஸ்தான் பவுலர்கள் ஒரு வழியாக பிரித்தனர்.

- Advertisement -

இந்த ஜோடியின் உதவியால் இந்திய அணி 181 ரன்கள் குவித்தது. பந்துவீச்சில் ரசித் கான் அற்புதமாக பந்து வீசி நான்கு ஓவர்களில் 26 ரன்கள் மட்டுமே கொடுத்து சிக்கனமாக பந்து வீசி மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். பின்னர் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி அஸ்மத்துல்லா அதிகபட்சமாக 26 ரன்கள் குவித்தார்.

மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொற்பரன்களில் விரைவிலேயே ஆட்டமிழந்து வெளியேறியதால், ஆப்கானிஸ்தான் அணியால் 134 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது. இந்திய தரப்பில் சிறப்பாக பந்து வீசிய பும்ரா நான்கு ஓவர்களில் 7 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த தோல்விக்கு பிறகு ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ரஷீத் கான் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் விரிவாக கூறும் பொழுது “இந்த மைதானத்தில் 180 ரன்கள் என்பது எட்டக்கூடிய இலக்கு தான். பெரிய அணிகளுக்கு எதிராக இது போன்ற ரன்களை எங்களால் அடைய முடியும் என்பது தெரியும். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் நாங்கள் இந்த வெற்றியை பெற்றிருக்க வேண்டும். நாங்கள் சிறப்பாக செயல்பட்டு இருந்தால் இந்தப் போட்டியின் வெற்றி எங்களுக்கே சொந்தம்.

இதையும் படிங்க:எனது திட்டத்தை மாற்றவில்லை.. பாண்டியா உள்ளே வந்த போது கூட நான் இதைத்தான் கூறினேன்.. சூரியகுமார் பேட்டி

ஆனால் முக்கியமான நேரத்தில் நாங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தோம். இது போன்ற போட்டிகளை விளையாடும் போது சரியான மனநிலையில் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். நான் முன்பு ஐபிஎல் தொடர்களில் பந்து வீச மிகவும் சிரமப்பட்டேன். ஆனால் இப்போது என்னுடைய சரியான மனநிலையில் பந்துவீச்சை சரி செய்து வீசி வருகிறேன். எப்படி செயல்பட்டிருந்தாலும் போட்டியின் முடிவே நல்ல மனநிலையை கொடுக்கும். நாங்கள் எல்லா இடங்களிலும் அனுபவித்து விளையாடினோம். இனி வரும் போட்டிகளில் வெற்றி பெற கடமையாக உழைப்போம்” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles