இந்தியா பாகிஸ்தானுக்கு வருமா.? இது மூலமா ஐசிசி யாருக்கு சப்போர்ட்னு தெரியும்- சல்மான் பட் பேட்டி

இந்திய கிரிக்கெட் அணி தற்போது டி20 உலக கோப்பையை வென்றுள்ள நிலையில் அதன் அடுத்த இலக்காக சாம்பியன் ஸ் ட்ராபி மற்றும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்களில் கவனத்தை செலுத்த இருக்கிறது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் பாகிஸ்தானில் சாம்பியன் டிராபி தொடர் நடைபெற இருப்பதால், இந்தியா பாகிஸ்தானுக்கு பயணிக்குமா? என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் சல்மான் பட் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

- Advertisement -

மினி உலகக் கோப்பை என்று அழைக்கப்படும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் கடைசியாக 2017ம் ஆண்டு நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி இந்திய அணியை வீழ்த்தி சாம்பியன்ஸ் டிராபி தொடரை கைப்பற்றியது. இதற்குப் பிறகு டி20 உலக கோப்பை மற்றும் ஒரு நாள் உலகக் கோப்பை தொடர்கள் நடைபெற்ற நிலையில் சாம்பியன் டிராபி தொடர் நடைபெறவில்லை.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் 2025ம் ஆண்டு திரும்பவும் சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் திட்டமிட்டுள்ளது. இந்தத் தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்த உள்ளதால், அதில் இந்திய அணி பங்குபெறுமா? என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. ஏனென்றால் இந்திய அணி கடைசியாக 2008ம் ஆண்டு பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டி விளையாடியது.

அதற்குப் பிறகு சில காரணங்களால் இந்திய அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செல்வதை முழுவதுமாகவே குறைத்தது. இந்த இரண்டு அணிகளும் ஐசிசி தொடர்களில் மட்டுமே மோதிக் கொள்கின்றன. இருப்பினும் பிசிசிஐ செயலாளரான ஜெய்ஷா அடுத்தது சாம்பியன்ஸ் டிராபி மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்களில் இந்திய அணி கவனத்தை செலுத்தும் என்று கூறி இருக்கும் நிலையில், இந்தியா பாகிஸ்தானுக்கு சென்று விளையாடும் என்றும் மறைமுகமாக கூறியுள்ளதாக கருத்துக்கள் வெளி வருகின்றன.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சல்மான் பட் இது குறித்து கேள்வி எழுப்பி இருக்கிறார். இது குறித்து அவர் விரிவாக கூறும்பொழுது “இந்திய அணி டி20 உலக கோப்பையை வென்று விட்டதால், அடுத்ததாக இந்தியா பாகிஸ்தானுக்கு பயணிக்கும் என்று ஜெயிஷா சிக்னல் கொடுத்து விட்டதாக கூறுகிறார்கள். ஆனால் அவர் எந்த சிக்னலும் கொடுக்கவில்லை. ஒருவேளை அவரிடம் இருந்து நேர்மறையான தகவல்கள் வந்தாலும் அது எந்த ஆர்வமும் எனக்கு ஏற்படாது.

இதையும் படிங்க:கோப்பை வீட்டுக்கு வருது.. எல்லாரும் மறக்காம வந்துருங்க.. ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்த ரோகித் சர்மா

ஏனென்றால் இது ஐசிசி பணியே தவிர பாகிஸ்தானின் பணி கிடையாது. ஒருவேளை அவர்கள் வராவிட்டால் இது குறித்து ஐசிசியே முடிவு செய்யும். அப்போது தெரியும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடுநிலையாக இருக்கிறதா? அல்லது இந்தியாவிற்கு சப்போர்ட் செய்கிறதா? என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles