இந்த விஷயத்துல கோலியை விட ரோகித்தான் சிறந்தவர் – கூறுகிறார் பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது சாஹித்

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்களாக தற்போது ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றனர்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் விராட் கோலியை விட ரோகித் சர்மாதான் சிறந்தவர் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் முகமது ஷாஹித் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணியின் மிகப்பெரும் தூண்களாக தற்போது விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் திகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே இவர்கள் டி20 உலக கோப்பை வென்று கொடுத்ததோடு அந்த பார்மெட்டில் இருந்து ஓய்வு பெற்றதுடன் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகின்றனர்.

- Advertisement -

விராட் கோலியைப் பொருத்தவரை ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன் குவித்தவர்களின் பட்டியலில் அசைக்க முடியாத வீரராக டாப் லிஸ்டில் இருக்கிறார். இவரது சாதனைகள் அவ்வளவு எளிதில் எந்த வீரராலும் தகர்த்து விட முடியாத சூழ்நிலையில் இருக்கிறது. ஒருநாள் கிரிக்கெட் மட்டுமல்லாமல் டி20 கிரிக்கெட்டிலும் பெரிய ரன்களைக் குவித்து இருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரிய சாதனைகள் படைக்காவிட்டாலும் அதிலும் சிறந்த வீரராக இருக்கிறார்.

அதுவே ரோகித் சர்மாவை எடுத்துக் கொண்டால் 2013ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் மிகப்பெரிய வீரராக வளர்ந்து வந்தார். அதிலும் மிடில் வரிசையில் விளையாடி வந்த ரோகித்தை கேப்டன் தோனி தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய பிறகு பெரிய வீரராக உருவெடுத்தார். இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் பந்துவீச்சாளரான முகமது சாஹித் விராட் கோலி விட ரோகித் சர்மா சிறந்த வீரர் என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “விராட் கோலி ஒரு தரமான கிளாஸ் வீரர் என்று அனைவருக்கும் தெரியும். அதை நானும் ஒப்புக் கொள்கிறேன். அவர் யாரும் அசைக்க முடியாத பல சாதனைகளை படைத்திருக்கிறார். ஆனால் என்னை கேட்டால் நான் விராட் கோலியை விட ரோகித் சர்மா தான் சிறந்த பேட்ஸ்மேன் என்று கூறுவேன்.

இதையும் படிங்க:IND vs SL 3வது போட்டி.. இந்திய டீமின் உத்தேச பிளையிங் லெவன்.. 27 வருட சாதனையை கட்டிக்காக்க அதிரடி மாற்றம்

ஏனென்றால் ரோகித் சர்மா இன்சமாம் உல் ஹக் போல வேகப்பந்துவீச்சை அச்சமின்றி தைரியமாக விளையாடக்கூடிய திறமை படைத்தவராக இருக்கிறார். அதனால் விராட் கோலியை விட ரோகித் சர்மா தான் சிறந்தவர் என்று கூறுவேன்” என்று கூறி இருக்கிறார். முன்னாள் வேகப்பந்துவீச்சாளரான முகமது சாஹித் தான் அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே பத்து விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles