பும்ரா அந்த 2 பேர் கூட கம்பேர் பண்ண கூடாது.. என்ன அவங்ககிட்ட கூடுதலா இந்த திறமை இருக்கு – பாசித் அலி பேட்டி

இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா. டி20 உலக கோப்பையை வென்றுள்ளதோடு இவர் ஓய்வெடுத்து வரும் நிலையில் முக்கிய தொடர்களில் மட்டுமே இனி பங்கு பெறுவார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் கேப்டன் பதவி குறித்து பும்ரா பேசி இருப்பதை தொடர்ந்து பாகிஸ்தான் முன்னாள் வீரரான பாசித் அலி பாபர் அசாம் செய்வதைப் போன்று பும்ரா செய்யக்கூடாது என்று சுட்டிக்காட்டி பேசி இருக்கிறார்.

- Advertisement -

பும்ரா சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், கபில் தேவ் மற்றும் இம்ரான்கான் ஆகியோர்களை முன் உதாரணமாகக் கொண்டு கேப்டன் பதவி குறித்து பேசி இருந்தார். பந்துவீச்சாளர்களும் கேப்டன் பொறுப்பில் சிறப்பாக செயல்பட முடியும் என்றும் ஆனால் கிரிக்கெட் வாரியங்கள் அதனை விரும்புவதில்லை என்று கூறியிருந்தார். இதன் மூலம் பும்ரா கேப்டன் பதவி குறித்து விரும்புகிறார் என்று வெளிப்படையாகவே தெரிகிறது.

- Advertisement -

ஐபிஎல் தொடரில் பும்ரா கேப்டன் ஆக ரோகித் சர்மாவுக்கு பிறகு நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதுவும் நடைபெறாமல் போனது. தற்போது இந்திய அணியிலும் இவர் கேப்டனாக வாய்ப்புகள் குறைவு என்ற சூழ்நிலை தற்போது இருக்கும் நிலையில் பும்ரா கருத்துக்களை பேசியிருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் பாசித் அலி கூறும் போது “பும்ரா கேப்டன் பதவி குறித்து பேசி இருப்பதை பற்றி கூற வேண்டும் என்றால், பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம் கேப்டன் பதவியை துரத்திக் கொண்டிருப்பது போல பும்ரா செய்யக்கூடாது. இவர் ஒரு தரமான பந்துவீச்சாளர். எனவே தனது பந்துவீச்சில் மட்டுமே பும்ரா கவனம் செலுத்த வேண்டும். மேலும் இம்ரான் கான் மற்றும் கபில்தேவ் ஆகியோரை முன் உதாரணமாக கூறியிருந்தார்.

- Advertisement -

ஆனால் அவர்கள் பந்துவீச்சாளர்களாக மட்டுமில்லாமல் ஆல் ரவுண்டர்களாக இருந்தனர். அதனால்தான் அவர்களால் சிறப்பாக செயல்பட முடிந்தது. ஒரு பந்து வீச்சாளருக்கும் ஆல்ரவுண்டருக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. மேலும் பும்ரா ஆஸ்திரேலியா கேப்டன் கம்மின்ஸ் பற்றியும் பேசி இருந்தார். கம்மின்ஸ் ஆஸ்திரேலியா அணியின் நல்ல கேப்டனாக இருக்கிறார்.

இதையும் படிங்க:நான் ஒத்துக்கவே மாட்டேன்.. கோலி கிங் கிடையாது.. அவ்ளோ பெரிய அந்த 2 வீரர்களையே அப்படி கூப்பிடல – பாகிஸ்தான் பசித் அலி பேட்டி

ஒரு நல்ல கேப்டனாக, பயிற்சியாளராக பந்துவீச்சாளர்கள் வருவதற்கு வாய்ப்புகள் குறைவாகும். பும்ராவிற்கு சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பிறகு இந்திய அணியின் கேப்டனாக வர வாய்ப்புள்ளது. அவருக்கு எனது வாழ்த்துக்கள்” என்று கூறி இருக்கிறார். பும்ரா அடுத்ததாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் களமிறங்க போகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles