நான் ஒத்துக்கவே மாட்டேன்.. கோலி கிங் கிடையாது.. அவ்ளோ பெரிய அந்த 2 வீரர்களையே அப்படி கூப்பிடல – பாகிஸ்தான் பசித் அலி பேட்டி

இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 16 ஆண்டுகள் நிறைவு செய்திருக்கிறார். இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகள் செய்துள்ள விராட் கோலியை உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் கிங் கோலி என்ற பெயரில் அழைக்கின்றனர். இதுகுறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான பாசித் அலி கூறியிருக்கும் கருத்துக்கள் ரசிகர்களிடம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

2008 ஆம் வருடம் மலேசியாவில் நடைபெற்ற 19 வயது உட்பட்டோருக்கான உலகக்கோப்பையை இந்தியா கைப்பற்றியது. அந்தப் போட்டி தொடரில் இந்திய அணியை வழிநடத்திய விராட் கோலி பேட்டிங்கிலும் மிகச் சிறப்பான பங்களிப்பை வழங்கினார். இதனைத் தொடர்ந்து 2008 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் இலங்கை சுற்றுப்பயணம் செய்த இந்திய அணியில் விராட் கோலி இடம் பிடித்தார். அதன் பிறகு தொடர்ச்சியான சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியின் டாப் பேட்ஸ்மேன் ஆக உயர்ந்தார்.

- Advertisement -

இந்நிலையில் பாகிஸ்தான் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பாசித் அலி, விராட் கோலி மிகச் சிறந்த வீரர் என குறிப்பிட்டார். மேலும் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், சையத் அன்வர், ஜாவித் மியான்டட் மற்றும் இன்சமாமுல் ஹக் போன்ற லெஜெண்டரி வீரர்களைப் போல விராட் கோலி நீண்ட காலம் சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என தெரிவித்துள்ளார். ஆனாலும் விராட் கோலியை கிங் என்று அழைப்பதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

இது தொடர்பாக பேசியிருக்கும் பாசித் அலி ” சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 16 ஆண்டுகள் தொடர்ந்து விளையாடுவது மிகப்பெரிய சாதனை. விராட் கோலி மேலும் 3 ஆண்டுகளுக்கு தொடர்ந்து கிரிக்கெட் விளையாடுவார் என நம்புகிறேன். அவரால் 19 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட் விளையாட முடியும். மிகவும் பிட் ஆக இருக்கிறார். கிரிக்கெட்டிற்கான அவரது அர்ப்பணிப்பு மிகச் சிறந்தது. அந்த அர்ப்பணிப்பின் காரணமாகத்தான் ஜாம்பவான் வீரர்களான சச்சின் டெண்டுல்கர், சுனில் கவாஸ்கர், சையது அன்வர், முகம்மது யூசுப், யூனிஸ் கான், இன்சமாம் உல் ஹக் மற்றும் ஜாவித் மியான்டட் போன்ற வீரர்களை போல் நீண்ட காலம் கிரிக்கெட் விளையாடி இருக்கிறார்.

அண்டர் 19 உலக கோப்பைக்கு பிறகு இந்திய சீனியர் அணிக்கு தேர்வு செய்யப்பட்ட விராட் கோலி உடனடியாக சர்வதேச கிரிக்கெட்டில் தனது தாக்கத்தை ஏற்படுத்தினார். அவர் 16 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டை ஆண்டு வருகிறார். மேலும் விராட் கோலிக்கு இந்திய அணியின் சீனியர் வீரர்களான மகேந்திர சிங் தோனி மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் ஆதரவு தந்து பக்க பலமாக இருந்தனர். ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் இளம் வீரர்களுக்கு மூத்த வீரர்கள் ஆதரவாக இருப்பதில்லை என தெரிவித்திருக்கிறார் பாசித் அலி.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர் சர்வதேச கிரிக்கெட்டில் உலகின் தலைசிறந்த வீரராக விராட் கோலி இருக்கிறார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை எனக் கூறினார். ஆனாலும் விராட் கோலியை கிங் என்று அழைப்பதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என தெரிவித்திருக்கிறார். விராட் கோலி கிரிக்கெட் மீது தீராத காதல் கொண்டவர். தற்போதைய காலகட்டத்தின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் அவர்தான். ஆனாலும் விராட் கோலியை கிங் என்று அழைக்க முடியாது என்று தெரிவித்தார்.

இது தொடர்பாக விளக்கமாக பேசிய அவர் ” கிரிக்கெட்டை விட சிறந்தது வேறு எதுவும் இல்லை. அதனால் கிரிக்கெட் விளையாட்டு தான் எப்போதும் கிங். அதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆஸ்திரேலியாவின் சர் டான் பிராட்மேன் மற்றும் இந்தியாவின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரை கூட நாம் கிங் என்று அழைத்ததில்லை. எனவே விராட் கோலியை கிங் என்று அழைப்பதையும் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். என்னை பொருத்தவரை கிரிக்கெட் மட்டும்தான் கிங் என தெரிவித்திருக்கிறார்.

மேலும் தன்னை கிங் என்று அழைப்பதை விராட் கோலி கூட விரும்ப மாட்டார் என பாசித் அலி தெரிவித்துள்ளார். தன்னுடைய பேட்டிங் மற்றும் ரன்களை பற்றி பேசுவதை விராட் கோலி விரும்புவார். ஆனால் தன்னை கிங் என்று அழைப்பது அவருக்கு பிடிக்காது என்றும் குறிப்பிட்டிருக்கிறார். ஏனென்றால் சச்சின் டெண்டுல்கர் சுனில் கவாஸ்கர் மற்றும் டான் பிராட்மேன் போன்ற ஜாம்பவான் வீரர்களை கூட நாம் கிங் என்று அழைத்ததில்லை. எனவே கிரிக்கெட் மட்டும்தான் எப்போதும் கிங் என தெரிவித்திருக்கிறார் பாசித் அலி.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles