பாகிஸ்தான் அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான பாபர் அசாம் தற்போது பேட்டிங்கில் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருவது கிரிக்கெட் ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சூழ்நிலையில் பாபர் அசாமை விராட் கோலி உடன் ஒப்பிட்டு பேசி வரும் நிலையில் சல்மான் பட் எந்த சூழ்நிலையிலும் விராட் கோலியை அவரோடு ஒப்பிடக்கூடாது என்று திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.
2008ஆம் ஆண்டு முதல் இந்திய அணியில் கிரிக்கெட் விளையாட்டு வரும் விராட் கோலி 2019ஆம் ஆண்டிலிருந்து 2022ஆம் ஆண்டு வரை பேட்டிங்கில் பெரிய சரிவை கண்டு வந்தார் என்றுதான் கூற வேண்டும். அதற்குப் பிறகுதான் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் சதம் அடித்து தனது பேட்டிங் ஃபார்மை மீட்டெடுத்தார். அதற்குப் பிறகு தற்போது வரை விராட் கோலி சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் விராட் கோலிக்கு அடுத்தபடியாக பேசப்படும் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவரான பாபர் அசாம் தற்போது பேட்டிங்கில் மட்டுமல்லாமல் கேப்டன்சியிலும் பெரிய சரிவை கண்டு வருகிறார். குறிப்பாக ஒரு நாள் உலகக் கோப்பை மற்றும் டி20 உலக கோப்பை என இரண்டிலுமே கேப்டன்சி மற்றும் பேட்டிங் என்று இதை இரண்டிலும் சொதப்பி வருகிறார்.
இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சல்மான் பட் பாபர் அசாம் குறித்துக் கூறும் போது “பாபர் அசாமை நீங்கள் பார்க்கும் போது இதற்கு முன்னர் சிறந்த வீரராக விளையாடிக் கொண்டிருந்தார். சமீப காலமாகத்தான் அவரால் தொடர்ந்து சிறப்பாக விளையாட முடியவில்லை என்பதும் மேலும் அவரது கேப்டன் பொறுப்பு குறித்த விமர்சனங்கள் வெளிப்படையாக அவருக்கு அழுத்தத்தை உள்ளாக்கி இருக்கிறது.
ஆனால் இது போன்ற அழுத்தங்களை பாபர் அசாம் விரைவில் எளிதாக கடந்து வருவார் மீண்டும் சிறப்பான முறையில் செயல்பட்டு பாகிஸ்தான் அணிக்கு வெற்றியை தேடி கொடுப்பார்” என்று சமீபத்தில் நடந்த பேட்டியில் சல்மான் கூறியிருந்தார். மேலும் விராட் கோலியுடன் பாபர் அசாமை பத்திரிகையாளர் ஒருவர் ஒப்பிட்டு பேசியதற்கு விராட் கோலியோடு பாபர் அசாமை ஒப்பிடவே கூடாது என்று கூறியிருக்கிறார் வேண்டுமானால் விராட் கோலி சரிவில் இருந்தபோது ஏற்பட்ட பேட்டிங் சரிவை பாபர் அசாமோடு ஒப்பிடலாம் என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க:அடி தூள்.. சச்சின் தோனி முதல் ரெய்னா வரை மீண்டும் ஆடலாம்.. புது ஐபிஎல் தொடர்.. பிசிசிஐ அசத்தல் பிளான்
விராட் கோலி தற்போது டி20 ஃபார்மட்டிலிருந்து ஓய்வு பெற்ற நிலையில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டுமே தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

