அடி தூள்.. சச்சின் தோனி முதல் ரெய்னா வரை மீண்டும் ஆடலாம்.. புது ஐபிஎல் தொடர்.. பிசிசிஐ அசத்தல் பிளான்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் 2008 ஆம் வருடம் இந்தியன் பிரிமியர் லீக் என்றழைக்கப்படும் டி20 கிரிக்கெட் தொடரை அறிமுகப்படுத்தியது. 8 அணிகளை கொண்ட தொடராக ஐபிஎல் ஆரம்பிக்கப்பட்டது. கிரிக்கெட் விளையாட்டில் முதல்முறையாக கால்பந்து போன்றே வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டனர். ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கப்பட்டு 17 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி பெற்று உள்ளது. இந்தியாவின் சர்வதேச வீரர்கள் உள்நாட்டு வீரர்கள் மற்றும் சர்வதேச கிரிக்கெட்டின் பிரபல வீரர்கள் என அனைவரும் ஐபிஎல் தொடரில் பங்கேற்று வருகின்றனர்.

- Advertisement -

மேலும் உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள கிரிக்கெட் பயிற்சியாளர்களும் ஐபிஎல் அணிகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக போட்டி போட்டுக் கொண்டுள்ளனர். மேலும் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளும் ஐபிஎல் தொடரை போன்றே பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளை தங்கள் நாடுகளில் நடத்தி வருகிறது. மேலும் கிரிக்கெட் பிரபலமடையாத அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளிலும் கிரிக்கெட் லீக் தொடர்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

- Advertisement -

சமீப காலமாக கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற முன்னால் வீரர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள தனியார் அமைப்புகளால் நடத்தப்படும் டி20 லீக் போட்டிகளில் விளையாடி வருகின்றனர். ஓய்வு பெற்ற வீரர்களின் கிரிக்கெட்டில் போட்டிகளும் உலகெங்கிலும் பிரபலமடைந்து வருகிறது. இந்தியாவில் சாலை விபத்து தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த டி20 கிரிக்கெட் லீக் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் உலகின் பிரபலமான ஓய்வு பெற்று வீரர்கள் கலந்து கொண்டனர். இந்தப் போட்டி தொடரும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்திய அணியின் ஜாம்பவான் வீரர்களான சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங், விரேந்தர் சேவாக், சுரேஷ் ரெய்னா,இர்ஃபான் பதான் போன்ற வீரர்கள் இந்தத் தொடரில் கலந்து கொண்டு விளையாடினர். மேலும் சர்வதேச நாடுகளைச் சேர்ந்த பிரபல வீரர்களும் இந்தத் தொடரில் பங்கு பெற்றனர். இந்த டி20 தொடரின் வெற்றியை தொடர்ந்து உலகில் உள்ள பல்வேறு தனியார் நிறுவனங்களும் ஓய்வு பெற்ற வீரர்களுக்கான டி20 லீக் போட்டிகளை நடத்த தொடங்கியது.

இதனைத் தொடர்ந்து ஓய்வு பெற்ற வீரர்களுக்கான டி20 போட்டிகள் கத்தார் மற்றும் துபாய் நாடுகளிலும் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் அமெரிக்காவிலும் ஓய்வு பெற்ற சர்வதேச வீரர்கள் கலந்து கொண்ட டி20 போட்டிகள் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. சமீபத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் ஆதரவுடன் வேர்ல்ட் சேம்பியன்ஸ் ஆப் லெஜன்ட் என்ற கிரிக்கெட் தொடர் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இங்கிலாந்தில் நடைபெற்ற இந்த போட்டி தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து,தென்னாபிரிக்கா போன்ற நாடுகளைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வீரர்கள் விளையாடினர். இந்தத் தொடரில் யுவராஜ் சிங் தலைமையிலான இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது.

- Advertisement -

இது போன்ற லீக் தொடர்களின் வெற்றியை தொடர்ந்து ஐபிஎல் போன்ற ஓய்வு பெற்ற வீரர்களுக்கான கிரிக்கெட் லீக் போட்டியை பிசிசிஐ நடத்த வேண்டும் என முன்னாள் வீரர்கள் சிலர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளரான ஜெய் ஷாவிடம் கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மேலும் இந்தத் தொடர் குறித்து பிசிசியை தரப்பிலிருந்து சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வருடத்தில் போட்டி தொடர் நடத்த வாய்ப்பில்லை என்றாலும் அடுத்த வருடம் நடத்துவது குறித்து பிசிசிஐ ஆலோசித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது.

ஐபிஎல் தொடர் போன்றே முன்னால் வீரர்களும் ஏலத்தில் எடுக்கப்பட்டு இந்த லீக் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் ஓய்வு பெற்ற இந்திய வீரர்களான தோனி, டெண்டுல்கர், சேவாக், யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா போன்ற வீரர்களை மீண்டும் ஐபிஎல் போட்டிகளில் காணலாம் என கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் இந்திய கிரிக்கெட் வாரியத்தால் இந்த தொடர் நடத்தப்படும் போது உலக அளவில் ஓய்வு பெற்ற வீரர்களுக்கான கிரிகெட் லீக் பிரபலம் அடையும் எனவும் கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles