ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறுகிற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பல பரீட்சை நடத்துகின்றன. அதற்கு முன்னர் கடைசியாக சென்னை அணி டெல்லி அணியுடன் மோதிய போட்டியில் மகேந்திர சிங் தோனி 16 பந்துகளில் 37 ரன்கள் குவித்தார்.தோனியின் ஆட்டத்தை ரசிகர்கள் மற்றும் இந்திய முன்னணி வீரர்கள் பாராட்டிய நிலையில், நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் தோனியின் பேட்டிங் குறித்து விமர்சித்து இருக்கிறார்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 191 ரன்கள் குவித்தது. இதற்குப் பின்னர் களம் இறங்கிய சென்னை அணிக்கு முன்னணி வீரர்கள் ஆட்டம் இழந்த நிலையில் மகேந்திர சிங் டோனி 17 வது ஓவரில் களமிறங்குவார். தான் எதிர்கொண்ட முதல் பந்தை பவுண்டரிக்கு விளாசிய தோனி அடுத்த பந்தில் சிங்கிள் எடுத்து ரவீந்திர ஜடேஜாவிடம் ஒப்படைப்பார். பின்னர் 17 வது ஓவரின் கடைசி பந்தில் பவுண்டரி விளாசிய தோனி அந்த ஓவரில் இருவரும் 14 ரன்களைக் குவித்து இருப்பார்கள்.
பின்னர் கலில் அகமது வீசிய 18 வது ஓவரில் ஐந்தாவது பந்தை சிக்சருக்கு விளாசும் தோனி அந்த ஓவரில் மொத்தமாக 12 ரன்கள் குவித்து இருப்பார்கள். அப்போது சென்னை அணியின் ஸ்கோர் 6 விக்கெட் இழப்புக்கு 146 என்ற நிலையில் இருக்கும். பின்னர் 12 பந்துகளுக்கு 46 ரன்கள் தேவை என்று இருக்கும் நிலையில் 19 ஆவது ஓவரை முகேஷ் குமார் வீசுவார்.
முகேஷ் குமார் வீசிய முதல் பந்தில் ஜடேஜா சிங்கிள் எடுத்து தோனியிடம் ஒப்படைக்க, அடுத்த மூன்று பந்துகளையும் தோனி எதிர்கொண்டு ரன்கள் எடுக்க மறுத்து, டாட் பால்களாக மாற்றுவார். இதனால் 19 வது ஓவரில் வெறும் ஐந்து ரன்கள் மட்டுமே வந்திருக்கும். ஆனால் இருபதாவது ஓவரை நோக்கியா வீச, அந்த ஓவரில் இரண்டு பவுண்டரிகள், இரண்டு சிக்சர்கள் என மகேந்திர சிங் தோனி 20 ரன்கள் மொத்தமாக விளாசி இருப்பார்.
இதனால் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியிடம் தோல்வி அடைந்திருக்கும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி அடைந்ததை கருத்தில் கொள்ளாமல் மகேந்திர சிங் தோனியின் இன்னிங்ஸ் குறித்து பல முன்னாள் வீரர்கள் பாராட்டி பேசி இருப்பார்கள். ஆனால் நியூசிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சைமன் டவுல் டோனியின் இன்னிங்சை விமர்சித்து பேசி இருக்கிறார். இது குறித்த அவர் கூறும் பொழுது
“மகேந்திர சிங் தோனியின் இன்னிங்ஸ் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி இது உண்மைதான். ஆனால் அவரது தற்காப்பு அணுகுமுறை கவலையை மட்டுமே ஏற்படுத்தியது. 19ஆவது ஓவரில் டோனி அதிக டாட்பால்களை எதிர்கொண்டார். சிங்கிள் எடுக்க வாய்ப்பு கிடைத்த போதும் கூட ரன்கள் எடுக்கத் தவறினார். தோனி ஒரு லெஜெண்ட் வீரராக இருந்த போதிலும், கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளாமல் இருப்பது அவரது முடிவு. ஆனால் அது கேள்விக்குறியாகவும் ஏமாற்றமாகவும் இருந்தது.
நீங்கள் போட்டியை வெல்ல முயற்சிக்கும் வேளையில், மகேந்திர சிங் தோனி நீண்ட காலத்திற்குப் பிறகு பேட்டிங் செய்கிறார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அவர் தனது பழைய பார்மை மீட்டெடுத்து இருக்கலாம். ஆனால் அந்த சூழ்நிலையில் அவர் செய்த செயல்களை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனக்கு அது மிகவும் மோசமாக இருந்தது.
இதையும் படிங்க:தமிழனுக்கே உரித்தான குணம்.. நேர்மையாக வெளியேறிய சாய் சுதர்சன்.. ரசிகர்கள் பாராட்டு
அந்தச் சூழ்நிலையில் அவர் சிங்கிள்ஸ் எடுக்க மறுத்தது எனக்கு சரியாக தெரியவில்லை” என்று கூறி இருக்கிறார். இதனைக் கேட்ட ரசிகர்கள் தோனிக்கு காலில் ஏற்பட்ட காயம் காரணமாகவே அவர் சிங்கிள்ஸ் எடுக்கவில்லை என்று கூறி சைமன் டவுலின் கருத்துக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

