2024 டி20 உலக கோப்பை வருகிற ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற உள்ளது. இதற்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் சில சர்ச்சைகளும் குழப்பங்களும் எழுந்துள்ளது. இந்திய தேர்வுக்குழு வாரியம் அறிவித்துள்ள உலகக்கோப்பை இந்திய அணி அதிருப்தியை ஏற்படுத்தியதாக கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரரும், இந்திய தேர்வுக்குழு தலைவருமான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் ரிங்கு சிங்கை எதற்காக எடுக்கவில்லை என்றும், நான்கு ஸ்பின்னர்களை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் என்ன என்றும் பல்வேறு காரசாரமான கேள்விகளை கேட்டு இருக்கிறார்.
இந்திய தேர்வுக்குழுவால் நேற்று அறிவிக்கப்பட்ட உலகக் கோப்பை இந்திய அணியில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக பினிஷர் ரிங்கு சிங் நீக்கப்பட்டு இருக்கிறார். கடந்த ஆறு மாத காலங்களில் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் ரிங்கு சிங் நீக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இத்தனைக்கும் அவரது பேட்டிங் ஆவரேஜ் 86 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 176 ஆகவும் இருந்துள்ளது.
மேலும் இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு வரும் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் உலகக் கோப்பை அணியில் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு பதிலாக பெங்களூர் அணியில் சுமாரான பங்களிப்பை வெளிப்படுத்தி வரும் முகமது சிராஜுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடிய வரும் ருத்ராஜ் இடம் மறுக்கப்பட்டு தற்போது சுமாரான பார்மை வெளிப்படுத்தி வரும் கில்லுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் தேர்வு குழு தலைவர் ஸ்ரீகாந்த் கூறும் பொழுது
“கடந்த ஆறு மாதகாலமாக இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் ரிங்கு சிங்கை அணியில் ஏன் எடுக்கவில்லை. இதற்கு பதிலாக இந்திய அணி யாரை வைத்து பினிஷிங் ரோலில் களம் இறக்கும். அவன் அப்படி என்ன பாவம் செய்தான் என்று தெரியவில்லை.
இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு வரும் நடராஜனுக்கு வாய்ப்பு கொடுக்காமல் முகமது சிராஜை அணியில் எடுத்தது ஏன்? அவரது சுமாரான செயல்பாட்டின் காரணமாக பெங்களூர் அணியிலேயே ஒரு போட்டியில் அவரை ஆட வைக்க வில்லை இப்படி இருந்தும் எதன் அடிப்படையில் தேர்வு குழு அவரை எடுத்தது.
இதையும் படிங்க:முதல் பந்தை வீசும் பொழுதே உடலில் வலி ஏற்படுவதாக கூறினார்.. இளம் வீரர் மயங்க் யாதவ் குறித்து கேப்டன் கே எல் ராகுல் பேட்டி
தற்போது கில்லை விட சிறப்பாக ஐபிஎல் விளையாடிக் கொண்டிருக்கும் ருத்ராஜ்க்கு ஏன் அணியில் இடம் கொடுக்கவில்லை. மேலும் சமீபத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் அபாரமாக விளையாடி 123 ரன்கள் எடுத்திருக்கிறார். மேலும் நான்கு ஸ்பின்னர்களை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் என்ன? இந்த உலகக் கோப்பை அணி எனக்கு மிகவும் அதிருப்தியாக உள்ளது” என்று கூறியிருக்கிறார்.

