2011 மாதிரி.. ரோஹித் கோலிக்கு இதை செய்ய வேண்டாம்.. அவங்க நிச்சயமா வேணும் – யோகராஜ் சிங் கருத்து

இந்திய கிரிக்கெட் அணியில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் அவர்கள் இருவரும் விரைவாக ஓய்வு பெற வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்து கருத்துக்கள் வெளிப்படுகிறது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இது குறித்து யுவராஜ் சிங் தந்தையான முன்னாள் கிரிக்கெட் வீரர் யோகராஜ் சிங் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணி டி20 உலக கோப்பையை வென்றதற்கு பிறகு கௌதம் கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்ற நிலையில் அதற்கு பிறகு இந்தியா தொடர்ச்சியான தோல்விகளை சந்தித்து வருகிறது. 27 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை அணியிடம் ஒரு நாள் தொடரில் தோல்வி அடைந்த இந்திய அணி சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் தோல்வியடைந்து சிக்கல்களுக்கு உள்ளானது.

- Advertisement -

இதற்கு இந்திய அணியின் சீனியர் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா சிறப்பாக செயல்படாதது இந்திய அணியின் பெரிய தோல்விகளுக்கு முக்கிய காரணம் என்று பல முன்னாள் வீரர்கள் இது குறித்த தங்களது கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் யோகராஜ் சிங் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் இந்திய அணிக்கு அடுத்த மூன்று முதல் நான்கு வருடங்களுக்கு தேவை என்று அதற்கான காரணம் குறித்து கூறியிருக்கிறார்.

இது குறித்து அவர் கூறும் போது “விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா போன்ற சீனியர் வீரர்கள் இந்திய அணிக்கு அடுத்த மூன்று முதல் நான்கு வருடங்களுக்கு நிச்சயம் தேவை. ஏனென்றால் அவர்களது அனுபவம் பும்ரா, கில் போன்ற இளம் வீரர்களுக்கு தேவையாகும். மேலும் யுவராஜ் சிங் போன்று திறமை உடைய அபிஷேக் ஷர்மா மற்றும் கில் போன்ற வீரர்களுக்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் வழங்க வேண்டும்.

- Advertisement -

இதையும் படிங்க:சன்ரைசர்ஸ் அணிக்கு ஜாக்பாட்.. இந்த தடவை மொத்த வித்தையும் அவர் காட்ட போறாரு – முகமது கைப் எச்சரிக்கை

2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற பின்னர் சீனியர் வீரர்கள் நீக்கப்பட்டதை போல இந்த அணியிலும் அது போன்ற செய்யக்கூடாது. சீனியர் வீரர்கள் இந்திய அணியுடன் தொடர்ந்து பயணித்து ஒரு பெரிய பெஞ்ச் பலத்தை உருவாக்க வேண்டும். அப்போதுதான் இது போன்ற தோல்விகளில் இருந்து இந்திய அணி தப்பிக்க முடியும். எனவே இந்திய அணிக்கு சீனியர் வீரர்கள் அவசியம். நான் சொல்வதை பிசிசிஐ காது கொடுத்து கேட்கும் என்று நம்புகிறேன்” எனக் கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles