ஐபிஎல் தொடருக்கான வீரர்களை தேர்ந்தெடுக்கும் மெகா ஏலம் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக துபாயில் நடைபெற்ற முடிந்தது. இதில் அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை வாங்கி அணியை வலுவாக கட்டமைத்தது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் சன்ரைசர்ஸ் அணி குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தற்போது நடைபெற்று முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் சிறப்பாக செயல்பட்டு தரமான வீரர்களை தங்கள் அணிக்கு வாங்கி வலுவாக கட்டமைத்தது. ஏற்கனவே கம்மின்ஸ், ட்ராவிஸ் ஹெட், கிளாசன்,அபிஷேக் ஷர்மா, நிதீஷ் குமார் ரெட்டி என ஏற்கனவே தக்க வைத்த வீரர்கள் வலுவாக இருக்கும் போது தற்போது இஷான் கிஷான், முகமது சமி என தரமான இந்திய வீரர்கள் வாங்கி அணியை மேலும் சிறப்பாக கட்டமைத்துள்ளது.
இதில் குறிப்பாக இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளரான முகமது சமி கடைசியாக கடந்த 2023ஆம் ஆண்டு ஒரு நாள் உலகக் கோப்பை தொடரில் விளையாடினார். அதற்குப் பிறகு ஏற்பட்ட காயத்தால் சுமார் ஒரு வருட காலம் இந்திய அணியில் இருந்து விலகி இருந்த நிலையில் தற்போது காயத்தில் இருந்து மீண்டு வந்து உள்நாட்டு தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறார். இந்த சூழ்நிலையில் முகமது சமியை ஹைதராபாத் அணி வாங்கியது ஒரு ஸ்மார்ட் மூவ் என இந்திய முன்னாள் வீரர் முகமது கைப் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது ” சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இந்த தொடரில் வலுவான அணிகளில் ஒன்றாக இருக்கிறது. மேலும் 10 கோடி ரூபாய்க்கு இந்திய பந்துவீச்சாளர் முகமது ஷமியை வாங்கி இருப்பது என்னை பொருத்தவரை ஸ்மார்ட் மூவ் என்று குறிப்பிடுவேன். ஏனென்றால் இன்றளவும் அவரால் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட முடியும். இது சன்ரைசர்ஸ் அணிக்கு மிகப்பெரிய வலிமையை ஏற்படுத்திக் கொடுக்கும்.
இதையும் படிங்க:ரோகித் சர்மா யாரையும் வற்புறுத்தல.. இது மாதிரி குப்பை தகவலை பரப்ப வேண்டாம் – ராஜிவ் சுக்லா ஆதங்கம்
அதுமட்டுமல்லாமல் துவக்கத்திலும் சிறப்பாக வீசி விக்கெட்டுகளை கைப்பற்றும் திறமை அவருக்கு இருக்கிறது. மேலும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பெற முடியாத வலியை எடுத்துக்கொண்டு ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்படுவார்” என்று முகமது கைப் கூறியிருக்கிறார். 18 வது ஐபிஎல் சீசன் வருகிற மார்ச் மாதம் இந்தியாவில் கோலாகலமாக தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே இதில் கோப்பையை வெற்றி பெறும் குறிக்கோளோடு ஐபிஎல் அடிகள் களம் இறங்கும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

