ஹர்திக் பாண்டியாவும் மனிதர்தான்.. அவருக்கு உணர்ச்சிகள் இருக்காதா.? பிசிசிஐ செய்யறது தப்பு – முகமது கைப் ஆதங்கம்

இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாடி முடித்திருக்கிறது. இதில் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தேவைப்படும் நேரத்தில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் ஹர்திக் பாண்டியா குறித்து சில முக்கியமான கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணி கடந்த ஜூலை மாதம் டி20 உலக கோப்பையை வென்ற பிறகு ரோகித் சர்மா டி20 வடிவத்தில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். நியாயமாக அவருக்கு பிறகு அடுத்த கேப்டனாக இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா தான் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவரது உடல் தகுதியை கருத்தில் கொண்டு பிசிசிஐ சூரியகுமார் யாதவை கேப்டனாக நியமித்தது. இருப்பினும் அவர் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஆகவும் அதற்கு முந்தைய இரண்டு சீசன்களில் குஜராத் அணியை ஒருமுறை டைட்டிலும் மற்றொரு முறை இறுதிப் போட்டிக்கு அழைத்து வந்திருக்கிறார்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் அவருக்கான உரிய மதிப்பு கொடுக்கப்படவில்லை என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் குற்றம் சாட்டி இருக்கிறார். இந்திய அணிக்கு தேவைப்படும்போதெல்லாம் தனது பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பாக செயல்படும் ஹர்திக் பாண்டியாவை பிசிசிஐ தொடர்ந்து ஓரம் கட்டுகிறது என கைஃப் சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

இது குறித்து கைப் விரிவாக கூறும்போது “ஹர்திக் பாண்டியா எப்போதெல்லாம் அணிக்கு தேவையோ அப்போதெல்லாம் ரன்கள் அடிப்பார். தேவைப்படும்போதெல்லாம் விக்கெட்டுகள் வீழ்த்தி அணியை வெற்றி பெற வைப்பார். டி20 உலக கோப்பை ஒவ்வொரு போட்டியிலும் ஹர்திக் பாண்டியா முக்கிய பங்காற்றி இருக்கிறார். அனைத்தும் செய்தும் அவர் இப்போது கேப்டனாக இல்லை. கேப்டனாக இல்லாத அது குறித்து அவர் வருத்தப்பட மாட்டார் என்று நினைக்கிறீர்களா? அவரும் மனிதர் தானே அவருக்கான வேதனை என்று நிச்சயம் இருக்கும்.

- Advertisement -

இதையும் படிங்க:13 சிக்ஸர்.. 135 ரன்கள்.. 2 விக்கெட் என ருத்ரதாண்டவம் ஆடிய அபிஷேக் ஷர்மா.. பல்வேறு சாதனைகள் உடைப்பு.. 150 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை புரட்டி போட்டது இந்தியா

அவர் இந்திய அணியின் துணை கேப்டனாக கூட இருக்கக் கூடாதா? அவர் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் மற்றும் இரண்டு முறை குஜராத் அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்து வந்தவர். ஆனால் அவர் இந்திய டி20 அணியின் கேப்டன் கிடையாது. எப்போதெல்லாம் இந்திய அணிக்கு தேவையோ அப்போதெல்லாம் அவர் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். அவர் எப்போதுமே தனது திறமையை வெளிப்படுத்த தவறியது இல்லை” என்று கூறி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles