நம்பிக்கையை மட்டும் விட்றாதீங்க.. கபில்தேவ் கவாஸ்கருக்கு கூட இப்படித்தான் நடந்துச்சு – இளம் வீரர்களுக்கு ஆறுதல் கூறும் பாலாஜி

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 போட்டிகள் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்க உள்ள நிலையில், தகுதி இருந்தும் திறமையான வீரர்கள் தேர்வு செய்யப்படாதது ஆச்சரியம் அளிக்கும் வகையில் அமைந்தது. இதுகுறித்து இந்தியாவின் முன்னாள் வீரர் பாலாஜி சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

ஐபிஎல்லில் சிறப்பாக செயல்பட்டு வரும் தமிழக வீரர் நடராஜன் மற்றும் ருத்ராஜ் ஆகியோர் அண்மையில் நடைபெற்ற முடிந்த டி20 உலக கோப்பைக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்று பலரால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்திய நிர்வாகம் அவர்களை தேர்வு செய்யவில்லை. மேலும் இந்திய அணியும் டி20 உலக கோப்பையை கைப்பற்றியதால் அந்த சர்ச்சை அப்படியே அடங்கிப்போனது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் ருத்ராஜூக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் தமிழக வீரர் நடராஜனுக்கு அந்தத் தொடரிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த சூழ்நிலையில் இலங்கை அணிக்கு எதிரான தொடரிலாவது இருவருக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழ்நிலையில், ருத்ராஜூக்கும் வாய்ப்பு வழங்கப்படாதது ஆச்சரியத்தை அளிக்கும் வகையிலே அமைந்தது.

- Advertisement -

இந்த நிலையில் தமிழக வீரர்கள் சிறப்பாக செயல்பட்டாலும் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று சுப்பிரமணியம் பத்ரிநாத் ஏற்கனவே வெளிப்படையாக கருத்து தெரிவித்திருந்த நிலையில், இந்தியாவின் முன்னாள் வீரரான லட்சுமிபதி பாலாஜி நம்பிக்கையை மட்டும் இழக்க வேண்டாம், இந்திய ஜாம்பவான் வீரர்களுக்கும் இதேபோன்றுதான் நடந்திருக்கிறது. எனவே கதவுகளை உடைத்துக் கொண்டு வாய்ப்பைப் பெறுங்கள் என்று கூறியிருக்கிறார்.

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “இந்திய அணிக்கு தேர்வாகாமல் போன முதல் ஆட்டக்காரர் ருத்ராஜ் கிடையாது, அதேபோன்று இவர் கடைசி வீரரும் கிடையாது. இதே போன்ற சூழ்நிலையை இந்தியாவின் ஜாம்பவான் வீரர்களான கபில்தேவ், கவாஸ்கர் மற்றும் கங்குலி போன்றோருக்கும் நிகழ்ந்திருக்கிறது. இதனால் இந்திய அணிக்கு யாரும் தேர்வாக மாட்டோம் என்ற நிலைக்கு மட்டும் வந்து விடக்கூடாது.

- Advertisement -

இதையும் படிங்க:இந்தியாவுக்காக நான் இந்த முடிவை எடுக்கப் போகிறேன்.. ஏன்ன இந்த விஷயம் ரொம்ப முக்கியம் – கம்மின்ஸ் பேட்டி

அணியில் தேர்வு செய்யப்படுவதும், படாததும் நமது கைகளில் சுத்தமாக கிடையாது. எனவே வாய்ப்புக்காக காத்திருக்காமல் அந்த வாய்ப்புக்கான கதவுகளை உடைத்து எறிய வேண்டும். எனவே இனிவரும் போட்டிகளில் ருத்ராஜ் மற்றும் நடராஜன் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணிக்கு மீண்டும் தேர்வு செய்யப்படுவார்கள்” என்று கூறி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles