ஆஸ்திரேலியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் கம்மின்ஸ் ஆஸ்திரேலிய அணியின் டி20 தவிர்த்து ஒரு நாள் மட்டும் டெஸ்ட் தொடர்களின் கேப்டனாக விளங்குகிறார். இந்த நிலையில் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடி வருவதன் காரணமாகவும், அடுத்து வரவுள்ள இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காகவும் முக்கிய முடிவை எடுத்திருக்கிறார்.
ஆஸ்திரேலியாவின் சிறந்த கேப்டன்களில் ஒருவராக விளங்குபவர் பாட் கம்மின்ஸ். இவரது தலைமையில் ஆசஸ் டெஸ்ட் தொடர்களையும், ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரையும், இந்தியாவில் நடைபெற்ற ஒரு நாள் உலகக் கோப்பை தொடரையும் வெற்றி பெற்று வரலாறு படைத்திருக்கிறார். ஆனால் இந்திய அணி தொடர்ச்சியாக இரண்டு முறை ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை வெற்றி பெற்றிருக்கிறது.
ஒருமுறை விராட் கோலி தலைமையிலும், மறுமுறை ரகானே தலைமையிலும் வெற்றி வெற்றி வரலாறு படைத்திருக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட்டை எப்போதுமே உயர்வாகவும், கௌரவமாகவும் கருதும் ஆஸ்திரேலியா அணி இந்தியா இரண்டு முறை டெஸ்ட் தொடரை வென்றதை ஆஸ்திரேலியாவிற்கு பெரிய கவுரவ குறைச்சலாக இருக்கிறது.
இதனால் அடுத்த முறை எப்படியாவது டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் இருக்கும் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் அமெரிக்காவில் நடைபெற்று வரும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் மட்டும் விளையாடிவிட்டு இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு எதிராக நடைபெற உள்ள வெள்ளைப் பந்து தொடர்களில் இருந்து ஓய்வெடுக்கப் போவதாக அறிவித்திருக்கிறார்.
இது குறித்து கம்மின்ஸ் விரிவாக கூறும்பொழுது “நான் இனி சில காலம் ஓய்வெடுப்பதாக முடிவு எடுத்து இருக்கிறேன். முடிவு எதற்காக என்றால் இனி அடுத்து வரவிருக்கிற முழு சீசனையும் விளையாட வேண்டும் என்பதே எனது திட்டம். ஆறு முதல் எட்டு வாரங்கள் முழுவதுமாக ஓய்வெடுத்து விட்டு பிறகு அங்கிருந்து தொடர்வது எனது திட்டம். தற்போது எம்எல்சி தொடரில் மட்டும் விளையாடிக் கொண்டிருக்கிறேன். நான் அமெரிக்காவில் விளையாடி முடித்துவிட்டு சென்றதும் எட்டு வாரங்கள் ஓய்வெடுக்க போகிறேன்.
இதையும் படிங்க:ஹர்திக் பாண்டியாவை இதனால்தான்.. நாங்க கேப்டனா கொண்டு வரல – காரணம் கூறுகிறார் அஜித் அகர்கர்
பிறகு ஜிம்மிற்கு சென்று சிறிது நேரம் பயிற்சி எடுக்கப் போகிறேன். அதற்கு பிறகு எங்களுக்கு கோடை காலத்தில் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் இருக்கிறது. அதுதான் எல்லாவற்றிற்கும் மையப் புள்ளியாக இருக்கும். தற்போது கிரிக்கெட் விளையாடும் அனைவரும் எதார்த்தத்தை பார்ப்பவர்களாக இருக்கிறார்கள். நாங்கள் சமீபத்தில் 12 மாதங்களில் 10 மாதங்கள் கிரிக்கெட் விளையாடி இருக்கிறோம் அவை அனைத்துமே முக்கியமான தொடர்கள். இதனால் நான் ஓய்வெடுக்க வேண்டியது கட்டாயமாகிறது” என்று கூறியிருக்கிறார்

