ஹர்திக் பாண்டியாவை இதனால்தான்.. நாங்க கேப்டனா கொண்டு வரல – காரணம் கூறுகிறார் அஜித் அகர்கர்

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 போட்டிகளில் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்க உள்ள நிலையில், அதற்கான இந்திய அணியை சில நாட்களுக்கு முன்பாக கௌதம் கம்பீர் மற்றும் அஜித் அகர்கர் தலைமையிலான குழு அறிவித்தது.

- Advertisement -

இதில் ஆச்சரியம் அளிக்கும் விதமாக, இந்திய அணி நிர்வாகம் டி20 தொடருக்கு ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக சூரியகுமார் யாதவுக்கு கேப்டன் பொறுப்பை வழங்கி இருக்கிறது. இது முன்னாள் வீரர்கள் பலரிடையே அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி வந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் தேர்வு குழு தலைவர் ஆன ஸ்ரீகாந்த் இந்த மாற்றம் தனக்கு புரியவில்லை என்று வெளிப்படையாகவே விமர்சித்து இருந்தார்.

- Advertisement -

வழக்கமாகவே இந்திய அணியை பொறுத்த வரை துணை கேப்டன் பதவி வகிக்கும் ஒருவர்தான் அடுத்த கேப்டனாக இந்திய அணிக்கு தொடர்வார். எடுத்துக்காட்டாக மகேந்திர சிங் தோனிக்கு பிறகு விராட் கோலியும் விராட் கோலிக்கு பிறகு ரோகித் சர்மாவும் ரோகித் சர்மாவுக்கு பிறகு ஹர்திக் பாண்டியா தான் துணைக் கேப்டனாக இருந்தார். ஆனால் இந்த சூழ்நிலையில் ஹர்திக் பாண்டியாவிற்கு பதிலாக சூரியகுமார் யாதவ் கேப்டன் பதவிக்கும், கில் துணை கேப்டன் பதவிக்கும் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் கௌதம் கம்பீர் தலைமையிலான புதிய பயிற்சியாளர் குழு இந்திய அணியை அறிவித்த பின்பு இன்று முதல் முறையாக செய்தியாளர் குழுவை சந்தித்தது. அதில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த கௌதம் கம்பீர் மற்றும் அஜித் அகர்கர் ஹர்திக் பாண்டியா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கான காரணத்தையும் கூறியிருந்தனர்.

இது குறித்து அஜித் அகர்கர் கூறும் பொழுது “ஹர்திக் பாண்டியா கேப்டனாக இல்லாமல் ஒரு வீரராக இந்திய அணிக்கும் மிக முக்கிய தேவை. ஏனென்றால் அவர் ஒரு மிகச் சிறந்த ஆல்ரவுண்டர் வீரர். அவரது பங்களிப்பு இந்திய அணிக்கு மிக முக்கிய அவசியமாகிறது. அவரது பிட்னஸ் பிரச்சனையின் காரணமாகத்தான் அவரை கேப்டன் பதவியில் பரிசீலிக்கப்படவில்லை. இந்திய அணிக்கு எதிர்காலம் நீண்ட கேப்டன் தேவை.

- Advertisement -

இதையும் படிங்க:எனக்கும் கோலிக்குமான உறவு இப்படித்தான் இருக்கு.. ரோஹித் கோலி 2027 உலக கோப்பையில் விளையாடுவார்களா? – கம்பீர் பேட்டி

எனவே இதை கருத்தில் கொண்டு மட்டுமே நாங்கள் சூரியக்குமார் யாதவிற்கு கேப்டன் பொறுப்பை வழங்கி இருக்கிறோம்” என்று கூறி இருக்கிறார். இந்திய அணி தனது முதல் டி20 போட்டியை 27ஆம் தேதி இலங்கையில் விளையாட உள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் தற்போது இலங்கை சென்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles