தோனி தனது பிளானை மாற்றிக் கொண்டார்.. இனி அவர் விளையாடுவது கடினம்தான்.. கூறுகிறார் இர்பான் பதான்

2024ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் ஒவ்வொரு போட்டியையும் காண ரசிகர்கள் ஆவலுடன் மைதானத்திற்கு படையெடுத்து வருகின்றனர்.

- Advertisement -

இதற்குக் காரணம் சென்னையின் மகேந்திர சிங் தோனி பேட்டிங்கில் களமிறங்கி விளையாடுவார் என்று நம்பிக்கையுடன் மைதானத்திற்கும் மற்றும் தொலைக்காட்சியிலும் இணையதளங்களின் வழியாகவும் அதிக எண்ணிக்கையிலான மக்கள் பார்த்து வருகின்றனர்.

- Advertisement -

2008ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்ற மகேந்திர சிங் தோனி, 2023ஆம் ஆண்டு வரை கேப்டனாகவே நீடித்தார். இடையில் 2022ஆம் ஆண்டில் ரவீந்திர ஜடேஜாவிடம் கேப்டன்சி ஒப்படைக்க, ஆனால் அது அவருக்கு சரியாக செட் ஆகாத காரணத்தினால் மீண்டும் அது தோனி வசமே சென்றது.

- Advertisement -

இதுவரை ஐந்து ஐபிஎல் பட்டங்களை வென்று கொடுத்துள்ள மகேந்திர சிங் தோனி இந்த ஐபிஎல் தொடரின் முதல் போட்டிக்கு முன்னதாக தனது கேப்டன்சியை விடுவித்து அணியின் இளம் வீரரான ருத்ராஜிடம் கேப்டன் பதவியை ஒப்படைத்தார். தோனி இப்போது தனது பேட்டிங்கில் கடைசி இரண்டு அல்லது மூன்று ஓவர்கள் மட்டுமே களமிறங்கி விளையாடி வருகிறார்.

இந்தத் தொடரில் இதுவரை மூன்று போட்டிகளில் களமிறங்கி விளையாடியுள்ள அவர், டெல்லி அணிக்கு எதிரான ஒரு போட்டியில் மட்டும் மூன்று ஓவர்கள் களத்தில் நின்றார். ஆனால் அந்தப் போட்டியில் மிகவும் அதிரடியாக விளையாடி பௌண்டரிகள் சிக்சர்கள் என விளாசி 16 பந்துகளில் 37 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

இந்த நிலையில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் மகேந்திர சிங் தோனி களம் இறங்கி விளையாடுவாரா? என்று கேட்ட கேள்விக்கு பதில் அளித்த இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் தான் இது குறித்து கூறும் பொழுது
“மகேந்திர சிங் தோனியின் மீது நிறைய எதிர்பார்ப்பு உள்ளது. 42 வயதான அவர் இளமையாக இருக்கிறார் என்று சொல்லலாம். ஆனால் தன்னை இளமையாக இருக்க மேம்படுத்திக் கொண்டு வருகிறார். முன்பெல்லாம் தோனி பத்தாவது அல்லது 11 வது ஓவரிலேயே களமிறங்கி ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைப்பார்.

இதையும் படிங்க:நான் தொடக்க காலத்தில் தடுமாறிய போது சச்சின் கூறிய அந்த வார்த்தைகள்.. என் ஆட்டத்தையே மாற்றியது.. முதல் போட்டியை நினைவு கூறும் பும்ரா

ஆனால் தற்போது ஆட்டத்தின் கடைசி இரண்டு அல்லது மூன்று ஓவர்களிலேயே களம் இறங்கி விளையாடுகிறார். இப்போது அவர் தன்னை சுருக்கிக் கொண்டு சிறிய பணியை மட்டுமே எடுத்துக் கொண்டு விளையாடி வருகிறார். எனவே என்னை பொறுத்தவரை அவர் நீண்ட நேரம் பேட்டிங் ஆடுவது நடக்காது என்று நினைக்கிறேன். ஆனால் அது நடந்தால் எல்லோருக்கும் நன்றாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார். எனவே சென்னை, மும்பை போட்டியைக் காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles