சிஎஸ்கே திரும்பத் திரும்ப தப்பு செய்றாங்க.. ஜடேஜா இதை செய்யணும்னு அவசியமே இல்லை.. அந்தப் பையனை கொண்டு வாங்க – ஆகாஷ் சோப்ரா

சென்னை சூப்பர் கிங்ஸ் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டு விளையாட உள்ளது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா சிஎஸ்கே குறித்து சில முக்கியமான விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடரை பொருத்தவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏற்கனவே பிளே ஆப் சுற்றில் இருந்து வெளியேறிவிட்டது. ஆனால் கொல்கத்தா அணிக்கு எஞ்சி உள்ள மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே அந்த அணி பிளே ஆப் சுற்று குறித்து நினைத்து பார்க்க முடியும். இந்த சூழ்நிலையில் கொல்கத்தா அணி இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக விளையாட உள்ளது.

- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் வரிசை இப்போதுதான் ஓரளவு நன்றாக செட்டாக ஆரம்பித்திருக்கிறது. சென்னை அணிக்கு புதிதாக வாங்கப்பட்ட பிரவிஸ் அதிரடியாக விளையாட 17 வயது வீரர் ஆயுஷ் மாத்ரே கடந்த போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா சிஎஸ்கே அணிக்கு இருக்கும் பிரச்சினை குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “ஷாம் கரணை எதற்கு தொடர்ந்து மூன்றாவது வீரராக அனுப்புகிறார் என்று தெரியவில்லை. அதேபோல ஜடேஜா ஏன் நான்காவது இடத்தில் வருகிறார். ஜடேஜா கடந்த பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் அவரால் ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்துக் கொடுக்க முடியவில்லை. தேவைப்படும் நேரத்தில் அவர் ஒரு பந்துக்கு ஒரு ரன் என்ற வீதத்தில் ஆடினார்.

- Advertisement -

இதையும் படிங்க:ஐபிஎல் தொடரிலிருந்து தோனி விடைபெறுகிறாரா?. சிஎஸ்கேவின் புதிய கேப்டன் யார்.? வெளியான முக்கிய தகவல்

இந்த சூழ்நிலையில் சிஎஸ்கே அணிக்கு நான்காவது வீரராக பிரவிஸ் சரியான தீர்வாக இருப்பார். அதற்குப் பின்னர் வேண்டுமானால் ஜடேஜாவை ஐந்தாவது வீரராக வைத்து கொள்ளலாம். எம்எஸ் தோனி அதற்குப் பின்னர் ஆறாவது இடத்தில் களமிறங்குகிறார். இருப்பினும் மகேந்திர சிங் தோனி தேவைப்பட்டால் அணியின் சூழ்நிலைக்கு தகுந்தவாறு எந்த இடத்தில் வேண்டுமானாலும் களம் இறங்கி விளையாட முடியும். மேலும் 17 வயது வீரர் ஆயுஷ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்த வயதில் இப்படி சிறப்பாக விளையாட முடியுமா? என்பதில் எனக்கு பெரிய ஆச்சரியமாக உள்ளது” என்று ஆகாஷ் கோபுர பேசியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles