ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் விளையாட உள்ளன.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா சென்னை அணியில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொருத்தவரை நடப்பு ஐபிஎல் தொடரில் மூன்று போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி மற்ற இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவி புள்ளி பட்டியலில் மிகவும் பின்தங்கி இருக்கிறது. எனவே இன்று நடைபெற உள்ள டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே கட்டாயம் வெற்றி பெற வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறது. சென்னை அணியை பொறுத்த வரை கடந்த மூன்று போட்டிகளாகவே தொடக்கம் சரியான வகையில் அமையவில்லை.
இதனால் தொடக்க வீரர் ராகுல் திருப்பாதிக்கு பதிலாக நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் டெவான் கான்வே சிஎஸ்கே தொடக்க வீரராக களம் இறங்க வேண்டும் என்று ரசிகர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். எனவே இன்றைய போட்டியில் அவர் தொடக்க இடத்தில் களம் இறங்கவில்லை என்றால் சிஎஸ்கே அழிவை நோக்கிச் செல்லும் என்று இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியிருக்கிறார்.
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “சிஎஸ்கே அணி கான்வேவை தொடக்க இடத்தில் விளையாட வைக்க வேண்டும் என்று ரசிகர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். நீங்கள் ராகுல் திருப்பாதி மற்றும் தீபக் ஹடா ஆகியோரையும் முயற்சி செய்தீர்கள். அதற்குப் பின்னர் ஷாம் கரண் மற்றும் ஜேமி ஓவர்டன் ஆகியோரையும் முயற்சி செய்து பார்த்தீர்கள். அனைவரையும் முயற்சி செய்து இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளீர்கள். எனவே மூன்றாவது போட்டியில் சரியான அணியை கொண்டு வரவில்லை என்றால் சென்னை அணி மீண்டு வருவது மிகப்பெரிய சிக்கலாகிவிடும்.
இதையும் படிங்க:கிங்குயா ஷர்துல் தாக்கூர்.. மும்பை அணியை தோல்வியடைய வைத்த திலக் வர்மா.. லக்னோ கொடுத்த ஷாக்
எனவே கான்வே, ரச்சின் மற்றும் ருத்ராஜ் ஆகிய மூவரும் அணியில் இருக்க வேண்டும். இந்த மூவரில் யார் தொடக்க இடத்தில் களமிறங்கினாலும் பரவாயில்லை. இவர்கள் மூவரும் முதல் மூன்று இடங்களில் இல்லை என்றால் அது சிஎஸ்கே அணிக்கு அழிவாகவே அமைந்துவிடும். வெளிநாட்டு ஆல் ரவுண்டர் தேவை என்று நினைத்தால் முன்னேற முடியாது எனவே சரியான மாற்றத்தை கண்டுபிடிங்கள். நீங்கள் நன்றாக விளையாடவில்லை என்றால் ஆடுகளத்தை குற்றம் சொல்லாதீர்கள். என்றால் நீங்கள் விரும்பியபடி ஆடுகளத்தை உங்களால் அமைத்துக் கொள்ள முடியும். உங்களிடம் மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் இருக்கலாம் ஆனால் அதே வகையான பந்து வீச்சாளர்கள் டெல்லி அணியில் இருக்கிறார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்” என்று அவர் கூறியிருக்கிறார்.

