இந்திய கிரிக்கெட் அணி தற்போது டி20 உலக கோப்பையில் வெற்றிப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
இதனால் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியதுடன் அடுத்த சுற்று போட்டிகள் வருகிற இருபதாம் தேதி முதல் வெஸ்ட் இண்டீஸ் மைதானங்களில் நடைபெற உள்ளன. இந்த நிலையில் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரின் மாற்றங்கள் குறித்து இந்தியாவின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் சில முக்கியமான கருத்துக்களை கூறியிருக்கிறார்.
டி 20 உலக கோப்பையில் இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சு காரணமாகவே இந்த மூன்று போட்டிகளிலும் முக்கியமாக வெற்றி பெற்று இருக்கிறது. பேட்டிங் சற்று கவலைக்குரிய வகையில் அமைந்து வந்தாலும் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இன்னமும் சரியாக கிளிக் ஆகாமல் இருக்கின்றனர். மூன்று போட்டிகளிலும் விளையாடிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஒரே ஒரு அரை சதம் மட்டுமே எடுத்திருக்கிறார்.
மேலும் விராட் கோலி 3 போட்டியிலும் விளையாடி ஐந்து ரன்கள் மட்டுமே குவித்து மோசமான பேட்டிங் ஃபார்மில் இருக்கிறார். இதனால் விராட் கோலி வழக்கமாக விளையாடும் மூன்றாவது இடத்திலேயே களமிறங்கி விளையாட வேண்டும் என்றும், அவரை மூன்றாவது இடத்திற்கு இறக்கிவிட்டு தொடக்க ஆட்டக்காரராக ஜெய் ஸ்வாலை களமிறக்க வேண்டும் என்று இந்திய முன்னால் வீரர்கள் பலர் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான வாசிம் ஜாஃபர் பேட்டிங் ஆர்டரில் இந்திய அணி எந்தவித மாற்றத்தையும் செய்ய வேண்டாம் எனவும், வரும் போட்டியிலும் இப்படியே தொடங்க வேண்டும் என்றும் அதற்கான காரணத்தையும் கூறியிருக்கிறார். இது குறித்து வாசிம் ஜாஃபர் விரிவாக கூறும் பொழுது
“இந்திய அணி டி20 உலக கோப்பை சூப்பர் 8 போட்டியிலும் இந்த பேட்டிங் வரிசையை அப்படியே தொடங்க வேண்டும்.
விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாகவே களம் இறங்கி விளையாட வேண்டும். இவர்கள் இருவரும் உலகத்தரமான வீரர்கள் எந்த நேரத்திலும் ஃபார்மிற்கு வரக்கூடிய திறன் இவர்களிடம் உள்ளது. இதனால் இந்தத் தொடக்கம் இப்படியே இருக்க வேண்டும். ஜெய்ஸ்வாலை இதற்குப் பிறகு தொடக்க ஆட்டக்காரராக களம் இறக்க வேண்டாம்.
இதையும் படிங்க:11 பேருக்கும் நான் வந்து விளையாட முடியாது.. ஒவ்வொருவருக்கும் ஒரு ரோல் உள்ளது.. பாபர் ஆசம் கோபம்
அப்படி இறக்கினால் விராட் கோலி 3ம் இடத்திற்க்கு செல்ல நேரிடும். விராட் கோலி மூன்றாவது இடத்திற்கு சென்றால் ஏற்கனவே மூன்றாவது இடத்தில் நன்றாக விளையாடிக் கொண்டிருக்கும் ரிஷப் பண்ட் மிடில் ஆர்டரில் விளையாடக்கூடும். அப்போது அவரது பேட்டிங்கில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதனால் இந்த எந்த மாற்றத்தையும் இந்திய அணி செய்யக்கூடாது” என்று வாசிம் ஜாஃபர் கூறியிருக்கிறார்.

