சிக்கலில் இருக்கும் சிஎஸ்கே ஜெயிக்க இதுதான் ஒரே வழி.. நானா இருந்தா கண்டிப்பா இந்த மாற்றத்தை செய்வேன் – ஸ்ரீகாந்த் பேட்டி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த முறை எதிர்மறையான விமர்சனங்களை எதிர் கொண்டு தற்போது சிக்கலில் இருக்கிறது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் சிஎஸ்கே அணியில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரை மொத்தமாக மூன்று போட்டிகளில் விளையாடி இரண்டு போட்டிகளில் தோல்வி மற்றும் ஒரு போட்டியில் வெற்றி பெற்று இருக்கிறது. இந்த சூழ்நிலையில் மற்ற அணியை காட்டிலும் சிஎஸ்கே அணியின் பேட்டிங் ஆர்டர் பலவீனமாக உள்ளது. மேலும் இந்த அணியால் ஒரு முறை கூட 200 ரன்கள் வரை எடுக்க முடியாது என ரசிகர்கள் விமர்சிக்க தொடங்கி விட்டனர். ஏனென்றால் மற்ற ஐபிஎல் அணிகள் சாதாரணமாக 200 ரன்கள் எடுக்கும் நிலையில் சென்னை இந்த விஷயத்தில் மிகவும் பின்தங்கி இருக்கிறது.

- Advertisement -

மேலும் மகேந்திர சிங் தோனியும் முழு உடல் தகுதி இல்லாமல் விளையாடி வரும் நிலையில் சொந்த ரசிகர்களே விமர்சனம் செய்வது தற்போது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு ஒரே தீர்வு என்னவென்றால் சென்னை அணி இனி அடுத்தடுத்து வரும் போட்டிகளில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்த சூழ்நிலையில் இது குறித்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது ” நான் இனி அடுத்த போட்டிகளில் ஜேமி ஓவர்டன்னை பிளேயிங் லெவனில் சேர்க்க மாட்டேன். அவருக்கு பதிலாக கான்வெ இடம் பெறுவது நல்லது. மேலும் கடந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட அன்சூல் கம்போஜ் அடுத்த போட்டிகளில் விளையாட வேண்டும். மேலும் ரவிச்சந்திரன் அஸ்வினை பவர் பிளவில் பயன்படுத்த மாட்டேன். அவரை ஏழாவது ஓவர் முதல் 18 வது ஒவ்வொரு வரை பயன்படுத்துவதே சிறப்பான விஷயமாகும்.

- Advertisement -

இதையும் படிங்க:ரொம்ப பதட்டமா இருந்துச்சி.. மேட்ச்க்கு முன்னாடி இத தான் செஞ்சேன்.. ஆட்டநாயகன் அஸ்வினி குமார் பதில்.. மிரண்டு போன ரவி சாஸ்திரி

அவர் ஜடேஜா மற்றும் நூர் அகமதுவோடு சேர்ந்து 10 ஓவர்கள் வீசுவதற்கு மிகவும் பொருத்தமாக இருப்பார். நானாக இருந்தால் இந்த மாற்றங்களை கட்டாயமாக செய்வேன். மேலும் இந்த அணியை பொருத்தவரை சிவம் தூபேவை பிளேயிங் 11-ல் கட்டாயமாக விளையாட வைப்பேன். மேலும் ஆன்ட்ரே சித்தார்த்தை இம்பாக்ட் பிளேயராக கொண்டு வருவேன். மேலும் முகேஷ் சௌத்ரி கூட ஒரு நல்ல விருப்பமாக இருப்பார். ஏனென்றால் அவர் கடந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது” என பேசி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles