விராட் கோலி வீக்னஸ் அவருக்கு கூட தெரியுது.. அதே மாதிரி ஹெட்டுக்கு இந்த யுக்தியை செயல்படுத்தனும் – முகமது கைப் பேட்டி

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் விளையாடி முடித்ததை அடுத்து அடுத்ததாக மூன்றாவது போட்டி வருகிற 14-ஆம் தேதி நடைபெற உள்ளது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைப் விராட் கோலி குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிற நிலையில் முதல் போட்டியில் இந்திய அணியும் இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா அணியும் வெற்றி பெற்று இருக்கிறது. இந்த சூழ்நிலையில் முதல் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடிய விராட் கோலி அதற்குப் பிறகு இரண்டாவது போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் மோசமாக ஆட்டம் இழந்து வெளியேறினார்.

- Advertisement -

அதாவது ஆப் ஸ்டம்புக்கு வெளியே வீசப்படும் பந்துகளுக்கு விராட் கோலி கண்டிப்பாக அவுட் ஆவார் என்கிற யுக்தியை ஆஸ்திரேலியாவில் வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று போட்டிகளில் விளையாடும் ஸ்காட் போலண்ட் கூட தெரிந்து வைத்திருக்கிறார். எனவே விராட் கோலியின் வீக்னசை அவர்கள் தெரிந்து வைத்திருக்கும் போது டிராவிஸ் ஹெட்டின் வீக்னஸ் என்ன என்பதை தெரிந்து இந்திய அணியினரும் அவரை விரைவாக ஆட்டம் இழக்கச் செய்ய வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் கூறியிருக்கிறார்.

இது குறித்து அவர் விரிவாகக் கூறும்போது “போலண்ட் மாதிரியான பந்துவீச்சாளர் ஆஸ்திரேலியாவில் வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடுகிறார். அவருக்கு விராட் கோலிக்கு எந்த இடத்தில் பந்து வீச வேண்டும் என்பது தெரிகிறது. ஆப் ஸ்டம்புக்கு வெளியே வீசினால் விராட் கோலி ஆட்டமிழந்து வெளியேறுகிறார் என்பது அனைவரும் அறிந்த வெளிப்படையான விஷயமாகிறது. விராட் கோலி எப்படி ஆட்டம் இழக்க வைக்க வேண்டும் என்று அவர்கள் தெரிந்து வைத்திருக்கும் போது ஹெட்டை எப்படி வெளியேற்றுவது என நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

- Advertisement -

இதையும் படிங்க:முதல்ல பயந்தேன்.. இப்போ பும்ராவை தாக்க ரெடியா இருக்கேன் – ஆஸி தொடக்க ஆட்டக்காரர் பேட்டி

ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கும் ஒரு பலவீனம் என்று நிச்சயமாக இருக்கும். அவருக்கும் ஆப் சைட் ஸ்டம்புக்கு வெளியே வீசி அவுட் ஆகி வெளியேறினால் நாம் ஏன் அவருக்கு தொடர்ந்து அந்த திசையில் வீசக்கூடாது. விராட் கோலியின் வீக்னஸ் என்ன என்று அனைவரும் தெரிந்து வைத்திருப்பது போல் ஹெட் எப்படி ஆட்டம் இழக்கிறார் என்று தெரிந்து வைத்திருக்க வேண்டும். எனவே இது போன்ற சரியான யுத்தியை பயன்படுத்தி களத்தில் செயல்படுத்த வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles