இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்னும் சில தினங்களில் பிரிஸ்பேனில் உள்ள கபாவில் நடைபெற இருக்கிறது. இரண்டு அணி வீரர்களும் தற்போது அடுத்த போட்டிக்காக மிக தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் நாதன் மெக்ஸ்வீனி பும்ரா குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிற நிலையில் முதல் போட்டியில் இந்திய அணியும், இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் வெற்றி பெற்றுள்ளன. இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் நாதன் மெக்ஸ்வீனி முதல் டெஸ்ட் போட்டியில் பும்ராவின் பந்துவீச்சிலேயே இரண்டு முறை ஆட்டம் இழந்தார்.
ஆனால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 109 பந்துகளை எதிர்கொண்டு 39 ரன்கள் குவித்தது அவருக்கு ஓரளவு நம்பிக்கையை கொடுத்து இருக்கிறது. இருப்பினும் 39 ரன்கள் அடித்த நிலையில் பும்ராவின் பந்து வீசிலேயே திரும்பவும் வெளியேறி இருக்கிறார். இந்த சூழ்நிலையில் இரண்டாவது போட்டியில் ஓரளவு நன்றாக விளையாடியது தனக்கு மிகுந்த நம்பிக்கையை கொடுத்து இருப்பதாகவும் அடுத்த போட்டியில் பும்ராவிற்கு எதிராக சிறப்பாக விளையாட காத்திருப்பதாகவும் ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் நாதன் மெக்ஸ்வீனி சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “எனது தொழில் வாழ்க்கையின் ஆரம்பத்தில் பும்ரா மாதிரியான பந்து வீச்சாளரை எதிர்கொள்வது எவ்வளவு கடினம் என்று தெரியும். மேலும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஓரளவு நன்றாக விளையாடுவதன் மூலமாக நான் மிகுந்த நம்பிக்கை கொள்கிறேன். நான் அவரை அதிகமாக எதிர்கொண்டு விளையாடுவதன் மூலமாக நம்பிக்கையோடு சிறப்பாக செயல்பட முடியும் என்று நம்புகிறேன். நான் அவரை முதன்முறையாக எதிர்கொண்டு விளையாடுகிறேன்.
இதையும் படிங்க:இவரை நம்புனது எங்க தப்புதான்.. இப்படி ஒரு பிளான் பண்ண போயி கடைசியில் மாட்டிக்கட்டோம்- கில் பேட்டி
அவர் ஒரு உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர். நான் விளையாடிய பல பந்துவீச்சாளர்களிடமிருந்து அவர் வித்தியாசமானவர். இருப்பினும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவரை எதிர்கொண்டு விளையாடும் அளவுக்கு நான் முழு நம்பிக்கையோடு இருக்கிறேன். மேலும் அவருக்கு எதிராக சில நல்ல ஷாட்கள் விளையாட முடியும் என்கிற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது. எனவே அடுத்த போட்டியில் அவரை எதிர்கொண்டு விளையாட தயாராக இருக்கிறேன்” என்று கூறி இருக்கிறார்.

