தற்போது நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி முதல் வெற்றி பெற்று இரண்டாவது ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை வருகிற ஞாயிற்றுக்கிழமை எதிர் கொள்ள உள்ளது.
இந்த சூழ்நிலையில் அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் களமிறங்கினர். இந்த சூழ்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக மூன்றாம் வரிசையில் இடது கை ஆட்டக்காரரான ரிஷப் பன்ட் களமிறங்கி சிறப்பாக விளையாடினார். மூன்றாம் வரிசையில் களமிறங்கி இந்திய அணியை வெற்றி பெற வைத்ததை அடுத்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் அவரை வெகுவாக பாராட்டியுள்ளார்.
கடந்த 16 மாதங்களுக்கு முன்னர் ரிஷப் பண்ட் டெல்லி நோக்கி பயணம் மேற்கொண்டிருந்த போது எதிர்பாராத கார் விபத்தில் சிக்கினார். இதனால் கிட்டத்தட்ட ஒரு வருடம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தனது விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கையின் காரணமாக கடந்த ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்றது மட்டும் இல்லாமல் சிறப்பாக விளையாடினார்.
அவர் டெல்லி அணிக்காக களமிறங்குவதற்கு முன்னர் அவர் உடல் தகுதி எந்த நிலையில் உள்ளது, அவரால் டி20 உலக கோப்பையை விளையாட முடியுமா? என்பது போன்ற கேள்விகள் எழுந்தன. இந்த கேள்விகள் அனைத்திற்கும் பதில் அளிக்கும் விதமாக ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய தன்னை உலகக்கோப்பைக்கும் தயாராக இருப்பதாய் உணர்த்தினார்.
இதன்மூலம் உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியின் போது மூன்றாம் வரிசையில் களமிறங்கி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் சிறப்பாக விளையாடி அரை சதமும் அடித்தார். மேலும் அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் 26 பந்துகளில் 36 ரன்கள் அடித்தது மட்டும் அல்லாமல் கடைசி பந்தில் சிக்சர் விளாசி தனது ஸ்டைலில் போட்டியை முடித்து வைத்தார்.
இந்த சூழ்நிலையில் அவர் காயத்தில் இருந்து மீண்டு வந்ததை குறிக்கும் விதமாக தினேஷ் கார்த்திக் அவரை பாராட்டி பேசி இருக்கிறார் இது குறித்து அவர் பேசியது பின் வருமாறு
“ஒரு மோசமான விபத்தில் இருந்து மீண்டு வருவது என்பது சாதாரணமான விஷயமே கிடையாது. தினசரி வேலைகள் செய்வதற்கு கூட அவருக்கு மிகவும் கடினமாக இருந்திருக்கும். அந்த நிலைமையை கடினமான மன உறுதியினாலும் விடாமுயற்சியினாலும் மீண்டு வந்துள்ளார்.
இதையும் படிங்க:வெஸ்ட் இண்டீஸ் மைதானம் கடினமான கணக்கு போன்றது.. அதன் ஃபார்முலா இவர்களுக்கு மட்டுமே தெரியும்.. கூறுகிறார் அஸ்வின்
அவர் இந்திய அணிக்காக சிறப்பாக செயல்பட்டு இந்த டி20 உலக கோப்பையை வெல்ல உதவுவார் என்று நம்புகிறேன்” என்று தினேஷ் கார்த்திக் கூறியிருக்கிறார். தற்போது ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெற்ற தினேஷ் கார்த்திக் டி20 உலக கோப்பை தொடரில் வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

