ஒன்பதாவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மைதானங்களில் நடைபெற்று வருகிறது. இதில் அனைத்து அணிகளும் தற்போது பயிற்சி போட்டியை முடித்து லீக் போட்டிகளில் விளையாடி வருகின்றன.
இதில் இந்திய அணி தனது முதல் போட்டியில் அயர்லாந்து அணியை வெற்றி பெற்று இரண்டாவது போட்டியை பாகிஸ்தான் அணிக்கு எதிராக வருகிற ஒன்பதாம் தேதி எதிர்கொள்ள உள்ளது. இந்திய அணி பேட்டிங்கை போல் தற்போது பந்து வீச்சிலும் மிகவும் வலிமையாக காணப்படுகிறது. பும்ரா,முகமது சிராஜ், ஹர்ஸ்தீப் சிங் ஆகிறது கூட்டணி எதிரடிகளுக்கு சவால் விடும் வகையில் அமைந்திருக்கிறது.
இந்த சூழ்நிலையில் இதுவரை நடந்துள்ள போட்டிகள் அனைத்துமே பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கிறது என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக அமெரிக்காவின் நியூயார்க் மைதானம் கட்டமைக்கப்பட்டு ஐந்து மாதங்களே ஆகியுள்ள நிலையில், அது வேகப்பந்து வீச்சுக்கே முற்றிலும் சாதகமாக மாறி உள்ளது.
இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையே நடைபெற்ற உலகக் கோப்பை டி20 போட்டியில் இலங்கை அணி 80 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் பறி கொடுத்தது. பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய தென்னாபிரிக்க அணிக்கு இலங்கை அணியின் பந்துவீச்சாளர்கள் நெருக்கடி கொடுத்ததால் அந்த குறைவான ரன்கள் இலக்கையும் 16 வது ஓவரில் தான் வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு போட்டியிலும் 200 ரண்களுக்கு மேல் கண்டுகளித்து உற்சாகமடைந்த ரசிகர்களுக்கு இந்த டி20 உலகக்கோப்பை தொடர் மிகவும் சளிப்படைந்து வருவதாக கூறுகின்றனர். மேலும் லீக் போட்டிகள் முடிவடைந்து சூப்பர் 8 போட்டிகள் வெஸ்ட் இண்டீஸ்மைதானங்களில் நடைபெறுவதால் அங்கும் இதே போன்ற சூழ்நிலை நிலவுவதாகவும் கூறப்படுகிறது.
இந்திய அணியின் ஜாம்பவான் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் இது குறித்து கூறும் பொழுது
” வெஸ்ட் இண்டீஸ் மைதானங்களில் பேட்டிங் செய்வது என்பது கடினமான கணக்கை தீர்ப்பதற்கு சமமானதாகும். அங்குள்ள மைதானங்களில் விளையாடுவதற்கு உங்களுக்கு சரியான ஃபார்முலா தெரிந்திருக்க வேண்டும். அங்குள்ள நிலவரம் பேட்டிங்க்கு ஏதுவாக இல்லை என்றாலும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவால் சிறப்பாக விளையாட முடியும்
இதையும் படிங்க:விராட் கோலியிடம் இருந்து பாபர் ஆஸம் இதை கத்துக்கணும்.. அப்பதான் இந்தியாவை வெல்ல முடியும்.. கூறுகிறார் பாக் முன்னாள் வீரர்
அவர்களால் உலகில் எந்த மைதானத்திலும் சிறப்பாக விளையாட முடியும்” என்று கூறியிருக்கிறார். அதாவது அதிரடியாக ஆடக்கூடிய பேட்ஸ்மேன்களை விட பேட்டிங்கில் நுணுக்கம் தெரிந்த பேட்ஸ்மேன்களே அங்குள்ள மைதானங்களில் சிறப்பாக விளையாட முடியும் என்று அஸ்வின் கூறி இருக்கிறார். இந்திய அணி தனது அடுத்த போட்டியை பாகிஸ்தான் அணியுடன் இதே மைதானத்தில் மோத உள்ளதால் இந்தப் போட்டியில் ஆவது அதிரடியாக விளையாடி இரு அணிகளும் ரன்கள் குவிக்க வேண்டும் என்று ரசிகர்கள் வேண்டி வருகின்றனர்.

