தோனிக்கும் கோலிக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு ஆனா பிரச்சனைய தீர்த்து வைக்கிறது தோனி தான் – சஞ்சய் பாங்கர் பேட்டி

இந்திய அணியின் நட்சத்திர கேப்டனாக விளங்கிய மகேந்திர சிங் டோனி தான் கேப்டன் ஆக இருந்த சமயத்திலேயே விராட் கோலியை கைகாட்டி விட்டு அவரது தலைமையின் கீழ் ஒரு சாதாரண வீரராக விளையாட தொடங்கினார்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் விராட் கோலி மற்றும் மகேந்திர சிங் தோனி இருவருக்கும் இடையே வேறுபாடு குறித்து இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக திகழ்ந்த சஞ்சய் பாங்கர் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

அனைத்து ஐசிசி கோப்பைகளையும் வென்று கொடுத்த ஒரே கேப்டன் இந்தியாவின் மகேந்திர சிங் தோனி. இந்திய கிரிக்கெட் அணியில் கேப்டன்சிக்கான அணுகுமுறையை விதைத்து விட்டு சென்றார். ஒரு கேப்டனாக பல்வேறு சாதனைகளை படைத்த மகேந்திர சிங் தோனி தான் ஓய்வு பெறும் சமயத்தை உணர்ந்ததும் கேப்டன் பொறுப்பை அப்போது வீரராக இருந்த விராட் கோலி வசம் ஒப்படைத்தார்.

- Advertisement -

அப்போது தோனியின் கீழ் மிக வசதியாக விளையாடிக் கொண்டிருந்த விராட் கோலி கேப்டன் பொறுப்பை ஏற்றதும் தனக்கே உரித்தான பாணியில் இந்திய அணியை வழிநடத்த விராட் கோலியின் தலைமையின் கீழ் மிகவும் சௌகரியமாக மகேந்திர சிங் தோனி ஒரு வீரராக அணியில் தொடர்ந்தார். தோனி மற்றும் விராட் கோலி என இருவருக்கும் இடையேயான புரிதல் மிக நன்றாக இருந்தது.

இது குறித்து இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் கூறும் போது “இந்திய கிரிக்கெட்டில் பல மாற்றங்களை ஏற்படுத்தியவர் மகேந்திர சிங் தோனி. ஒரு கேப்டனாக தோனி இருக்கும்போது எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வை யோசித்து களத்திற்குள் நுழைவதற்கு முன்னால் ஒரு விஷயத்தை அனைத்து கோணங்களிலும் ஆராய்ந்து சென்றார்.

- Advertisement -

நான் ஒரு விஷயத்தை செய்யும்போது அதைப்பற்றி நான் எல்லா தகவல்களையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று மகேந்திர சிங் தோனி நினைத்தார். மேலும் கிரிக்கெட் களத்தில் எதிரணி தவறு செய்யும் வரை தோனி காத்திருந்தார். அது அவருக்கு டி20 மற்றும் ஒரு நாள் தொடரில் மிகப்பெரிய பயனாக அமைந்தது. மேலும் சுழல் பந்துவீச்சாளர்களை பயன்படுத்தும் நோக்கில் அவர் கைதேர்ந்த வல்லவராக திகழ்ந்தவர்.

இதையும் படிங்க:வெறும் 20 ரன்.. 7 விக்கெட்.. மீண்டும் தென் ஆப்பிரிக்கா அணிக்கு நடந்த சோகம்.. தப்பித்த வெஸ்ட் இண்டீஸ்.. அச்சு அசல் உலகக் கோப்பை பைனல் தான் இது

விராட் கோலியின் தலைமை வெளிநாட்டில் வெற்றி பெற வேண்டும் என்கிற ஆர்வத்தை தூண்டியது. அவர் வந்த பிறகு வெளிநாட்டு ஆடுகளங்களில் 5 வேக பந்துவீச்சாளர்களுடன் பயணிக்கும் முறை பிறந்தது. வெளிநாட்டு மண்ணில் வெற்றி பெற வேண்டும் என்ற வேகத்தை கொண்டு வந்தார். மேலும் ஒரு கேப்டனாக பேட்ஸ்மேன் கூடுதல் பொறுப்பு ஏற்றுக் கொள்ளும் படியும் செய்தார்” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles