இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் என்று மோசமான தோல்விகளை சந்தித்து வந்துள்ளது.
இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற் பந்துவீச்சாளர் மாண்டி பனேசர் கௌதம் கம்பீர் குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இந்திய அணியின் மோசமான தோல்விக்கு முக்கிய காரணம்
டி20 உலக கோப்பையை ராகுல் டிராவிட் வென்று கொடுத்த பிறகு தனது பயிற்சியாளர் பதவியை விட்டு விலக அவருக்கு பிறகு கௌதம் கம்பீர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றுக்கொண்டார். அதற்குப் பிறகு வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை மட்டுமே கௌதம் கம்பீர் தலைமையிலான இந்திய அணி வென்ற நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அன்னிய மண்ணில் டெஸ்ட் தொடர் மற்றும் நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடர் என்று வரிசையாக தோல்விகளை இந்திய அணி சந்தித்து விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.
மேலும் கௌதம் கம்பீர் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய வீரர்களோடும் கிரிக்கெட் விளையாடி இருப்பதால் இப்போது பயிற்சியாளராக மாறிய பிறகு சீனியர் வீரர்களுக்கு அறிவுரைகள் வழங்குவதில் சில சங்கடங்கள் ஏற்படலாம். இதுவும் இந்திய அணியின் தோல்விக்கு ஒரு பகுதியான காரணமாக பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் கௌதம் கம்பீர் முன்னணி அணிகளுக்கு எதிராக டெஸ்ட் சராசரி குறைவாக இருக்கிறது என்றும், மேலும் இந்திய அணியின் தோல்விக்கு சில முக்கிய காரணங்களையும் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மாண்டிபனேசர் கூறியிருக்கிறார்.
சீனியர்களிடையே உண்டாகும் சங்கடம்
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “நானும் அப்படித்தான் என்று நினைக்கிறேன். இது ஒரு நல்ல வழியாக இருக்கிறது. கௌதம் கம்பீருக்கு தற்போது அதிகமான வேலைப்பளு உள்ளது. இப்போது அவர் அனைத்து வடிவ தொடருக்கும் பயிற்சியாளராக மாறிவிட்டார். சில நேரங்களில் நான் அவரோடு கிரிக்கெட் விளையாடக்கூடிய சக வீரராக இருந்தேன். ஆனால் இப்போது அவர் எங்களுக்கு பயிற்சி அளிக்கக் கூடிய பயிற்சியாளராக மாறிவிட்டார் என்று மூத்த வீரர்களுக்கு இடையே சில கடினமான சூழ்நிலை ஏற்படலாம். அந்த மாற்றம் கடினமாக இருக்கலாம்.
இதையும் படிங்க:நல்லா கேட்டுக்கோங்க.. சாம்பியன்ஸ் டிராபியில் இந்த ஒரு இந்திய வீரர் மட்டும் இல்லன.. பாகிஸ்தான் அணி ஈஸியா ஜெயிக்கும் – அமீர் பேட்டி
மேலும் கம்பீர் பேட்ஸ்மேன் ஆக ஆஸ்திரேலியாவிலோ அல்லது இங்கிலாந்திலோ பெரிய சாதனைகள் அவருக்கு இல்லை. ஆஸ்திரேலியாவில் கம்பீர் சராசரியாக 23 ரன்கள் எடுத்திருக்கிறார். ஆனால் இங்கிலாந்தில் அவரது சராசரி குறிப்பிடும்படி பெரிதாக இல்லை. எனவே இது அவருக்கு கடினமாக இருக்கலாம் ” என்று மாண்டி பனேசர் கூறியிருக்கிறார். அதாவது விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோருக்கு இடையே கம்பீர் அறிவுரைகள் கூறுவது சில சங்கடங்களை ஏற்படுத்தலாம் என்று மாண்டிபனேசர் கூறியிருக்கிறார்.

