பும்ரா முதல் 6 ஓவர்ல இத செஞ்சது.. இப்பதான் பார்க்கிறேன்.. புதுசா இருந்துச்சு – இங்கி மைக்கேல் வாகன் பேட்டி

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி மெல்போனில் இன்று நடைபெற்று வரும் நிலையில் ஆஸ்திரேலியா அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

- Advertisement -

அதில் ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் சாம் கான்ஸ்டாஸ் குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிற நிலையில் இதுவரை மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற நான்காவது போட்டியில் ஆஸ்திரேலியா உள்நாட்டு தொடரில் சிறப்பாக விளையாடியவரும் சாம் கான்ஸ்டாஸ் முதல்முறையாக இந்திய டெஸ்ட் அணிக்கு எதிராக விளையாடும் வாய்ப்பு பெற்றார்.

- Advertisement -

உலக கிரிக்கெட்டில் தற்போது மிகச் சிறந்த வேகப் பந்து வீச்சாளராக கருதப்படும் பும்ராவின் பந்து வீச்சில் ஸ்கூப் சிக்ஸர் அடித்து ஒரே நாளில் அனைவரும் பேசும்படியான வீரராக மாறி இருக்கிறார். பும்ராவின் வந்து வீச்சில் அனைவரும் நேராக விளையாடவே தடுமாறி வரும் நிலையில், இவரது ஸ்கூப் சிக்ஸர் அனைவரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான மைக்கல் வாகன் ஆஸ்திரேலியா இளம் வீரர் குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “சாம் விளையாடியது மிகவும் அபாயகரமான ஒரு ஷாட் ஆகும். அதை பார்ப்பதற்கு மிகவும் வேடிக்கையாக இருந்தது. பும்ரா பந்து வீசுகிறார் என்றால் அவரது பந்தை நேராக விளையாட எதிர் கொள்வீர்கள் தானே, ஆனால் அவர் விளையாடிய விதம் வித்தியாசமாக இருந்தது. பும்ரா முதல் முறையாக ஆறு ஓவர்கள் வித்தியாசமாக வீசுவதை பார்த்தேன். முதல் ஆறு ஓவரில் மெதுவான மற்றும் யார்கர் பந்துகளை வீசினார்.

- Advertisement -

இதையும் படிங்க:கோலிய தப்பா நினைக்காதீங்க.. உண்மையா அங்க நடந்த கதையே வேற.. மறைக்காம காரணத்த சொல்றேன்.. 19 வயது ஆஸ்திரேலிய வீரர் பேட்டி

எங்களைப் போன்று 1980 மற்றும் 90களில் விளையாடிவவர்கள் நிச்சயமாக இது ஒரு ஆபத்தான அணுகுமுறை என்றுதான் கூறுவார்கள். ஆனால் அவர் விளையாடிய விதம் மிகவும் நேர்த்தியாக அற்புதமாக இருந்தது” என்று மைக்கேல் வாகன் கூறியிருக்கிறார். சாம் இறுதியாக 60 ரன்னில் ஜடேஜாவின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியா அணி முதல் நாள் ஆட்ட நேரம் முடிவில் ஆறு விக்கெட் இழப்புக்கு 311 ரன்கள் குவித்துள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவது கட்டாயமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles