விராட் கோலி விளையாட விட்டுருக்க கூடாது.. எதுக்குமே ஒரு எல்லை இருக்கு.. அதை அவர் தாண்ட கூடாது – இங்கி ஹார்மிசன் பேட்டி

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரராக 19 வயது இளம் வீரர் சாம் கான்ஸ்டாஸ் அறிமுகமானதை தொடர்ந்து இந்திய வீரர் விராட் கோலி அந்தப் போட்டியில் தனது சேட்டையை காட்டினார்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் ஸ்டீம் ஹார்மிஷன் இது குறித்து தனது கருத்து தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியின் போது தனது அறிமுக போட்டியில் விளையாடிய 19 வயது இளம் வீரர் சாம் கான்ஸ்டாஸ் மீது விராட் கோலி வேண்டும் என்றே உரசலில் ஈடுபடுவது போன்ற காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. பொதுவாக இந்த செயலில் ஈடுபடும் வீரர்களுக்கு ஒரு போட்டி அல்லது இரண்டு வெள்ளை பந்து போட்டியில் விளையாட தடையாக விதிக்கப்படும். ஆனால் விராட் கோலிக்கு அப்படி எதுவும் நிகழாமல் போட்டியிலிருந்து 20 சதவீதம் மட்டுமே அபாரத்தை ஐசிசி விதித்துள்ளது.

- Advertisement -

இது தற்போது வரை ஐசிசி ஒருதலைபட்சமாக செயல்படுகிறது என்று கூறப்பட்டு வந்தது. மேலும் இதில் விராட் கோலி மீது மட்டுமே தவறு இருப்பதாகவும் கருத்துக்கள் வெளிவந்த நிலையில் தற்போது அது குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்டீவ் ஹார்மிஷன் அத்தகைய செயலில் ஈடுபட்ட விராட் கோலிக்கு விளையாட தடை விதித்திருக்க வேண்டும் எனவும், தடை விதிக்கப்படாமல் இருக்கும் நிலையில் எதிர்காலத்தில் இது ஒரு தவறான முன்னுதாரணமாக மாறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “அந்தப் பிரச்சினையில் விராட் கோலி என்ன செய்தார் என்பதை நாம் நேரடியாக பார்த்தோம். அந்தப் பிரச்சனையில் நேரடியாக தன்னை ஈடுபடுத்தினார். இதற்கு விராட் கோலி விளையாடத் தடை விதிக்கப்பட்டிருக்க வேண்டும். நான் விராட் கோலியை எவ்வளவு நேசிக்கிறேன், அவர் இந்த விளையாட்டுக்காக எந்த அளவு தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார் என்பது அனைத்துமே தெரியும்.

- Advertisement -

இதையும் படிங்க:பும்ராவை சமாளிச்சிடலாம்.. ஆனா அந்த ஒரு இந்திய பவுலர் பந்தை மட்டும் ஆடவே பயமா இருக்கு.. ரொம்ப பதட்டம் ஆயிடுச்சு – டிராவிஸ் ஹெட் பேட்டி

ஆனால் எதற்குமே ஒரு எல்லைக்கோடு என்று இருக்கிறது. அதைத் தாண்டி செயல்படக்கூடாது. இது ஒரு தவறான முன்னுதாரணமாக மாறிவிடும்” என்று கூறி இருக்கிறார். விராட் கோலி மற்றும் ஷாம் அந்த பிரச்சனையில் ஈடுபட்ட பிறகு இருவரும் பேசி சரிசமமாக அந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி அந்த டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்து ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று தொடரை இழந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles