பும்ராவை சமாளிச்சிடலாம்.. ஆனா அந்த ஒரு இந்திய பவுலர் பந்தை மட்டும் ஆடவே பயமா இருக்கு.. ரொம்ப பதட்டம் ஆயிடுச்சு – டிராவிஸ் ஹெட் பேட்டி

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியா நாட்டில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 1-1 என்ற சமநிலையை இரண்டு அணிகளும் பெற்று வந்த நிலையில், மூன்றாவது போட்டியானது காபா நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

- Advertisement -

மூன்றாம் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா அணியானது 75 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தொடக்கத்திலே தடுமாற தொடங்கியது. ஆனால், அதற்குப் பின் ஜோடி சேர்ந்த டிராவிஸ் ஹெட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் தனது புத்திசாலித்தனமான விளையாட்டு யுத்தியை பயன்படுத்தி ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 445 ரன்களை எடுக்க உறுதுணையாக இருந்தது.

- Advertisement -

ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 160 பந்துகளில் 152 ரன்களையும், ஸ்டீவ் ஸ்மித் 190 பந்துகளில் 101 ரன்களையும் குவித்து அசத்தினர்.

- Advertisement -

டிராவிஸ் ஹெட், “மூன்றாவது டெஸ்ட் போட்டியின் 2வது நாளில் அவரை பதற்றம் அடைய செய்தது ஜஸ்பிரிட் பும்ரா அல்ல, ஆனால் அதிவேக சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா” என்று கூறியுள்ளார்.

அவரின் பந்தை தடுக்க கஷ்டப்பட்டேன்:

போட்டி முடிவில் டிராவிஸ் ஹெட் கூறுகையில், “ஜடேஜா அற்புதமாக பந்துவீசினார், விக்கெட் எடுக்க ஏதுவான பந்துகளை வீசினார், மேலும் அவருக்கு எதிராக பேட்டிங் செய்யும் பொழுது பந்துகளை தடுக்க எப்போதும் கடினமாகவே இருந்தது”.

- Advertisement -

அவருக்கு எதிராக ப்ளூ பிரிண்டே போட்டு வைத்தேன்:

மேலும் அவர் கூறுகையில், “நான் இந்தியாவுக்கு எதிராக போதுமான அளவு விளையாடியுள்ளேன் என்று நினைக்கிறேன்; நான் ஒரு ப்ளூ பிரிண்ட் வைத்திருந்தேன், ஏனென்றால் சுழலுக்கு எதிராக தொடங்க எனக்கு சற்று பதற்றமாகவே இருந்தது.

இன்று ரவீந்திர ஜடேஜாவுக்கு எதிராக நான் பேட்டிங்கை தொடங்கிய விதம் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. புதிய பந்து விளையாட்டு முழுவதும் பேட்ஸ்மேன்களை திணறச் செய்யும்; நான் விளையாட்டின் தொடர்ச்சி பற்றி அதிகம் அறிந்திருக்கவில்லை, ஆனால் இந்த வானிலை நல்லதுதான் என்று நம்புகிறேன். போட்டியில் புதிய பந்து தான் முக்கியமானதாக இருக்கும்” என்று கூறி முடித்தார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles