ஐபிஎல் தொடரின் 61-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடிய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருத்ராஜ் 41 பந்துகளில் 42 ரன்கள் விளாசி இருப்பார்.
இந்த நிலையில் ருத்ராஜை மட்டும் கேள்வி கேட்காமல் விராட் கோலி மீது மட்டுமே டார்கெட் வைப்பதற்கான காரணம் என்ன? என்று சென்னை அணிக்காக விளையாடிய சிஎஸ்கே முன்னாள் வீரர் அனிருதா ஸ்ரீகாந்த் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் குவித்தது. பின்னர் வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய சென்னை அணி 18 ஓவர்களில் 145 ரன்கள் குவித்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் அணியின் கேப்டன் ருத்ராஜ் 41 பந்துகள் விளையாடி 42 ரன்கள் குறித்து ஒரு பவுண்டரி மற்றும் இரண்டு சிக்ஸர்களுடன் 102.44 பேட்டிங் ஸ்டிரைக் ரேட்டில் விளையாடி இருப்பார். இவர் இன்னும் சற்று அதிரடியாக விளையாடி இருந்தால் சென்னை அணி முன்பே வெற்றி பெற்று பிளே ஆப் செல்வதற்கான வாய்ப்பை இன்னும் பிரகாசப்படுத்தி இருக்கும்.
தற்போது இவரது பேட்டிங் குறித்து எந்த ஒரு விமர்சனமும் எழாத நிலையில், விராட் கோலி சமீபத்தில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 43 பந்துகளில் நான்கு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ருடன் 51 ரன்கள் 118 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி இருப்பார். அப்போது விராட் கோலி மிகவும் மந்தமாக விளையாடுகிறார். இவர் டி20 கிரிக்கெட்டுக்கு செட் ஆக மாட்டார் என்பது போன்ற விமர்சனங்கள் எழுந்த நிலையில் இது குறித்து தனது ஆதங்கத்தை முன்னாள் சிஎஸ்கே வீரர் அனிருத் ஸ்ரீகாந்த் தனது யூ டியூப் சேனல் மூலம் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இது குறித்து அவர் கூறும் பொழுது
“ருத்ராஜ் இந்த போட்டியில் 41 பந்துகள் எதிர் கொண்டு 42 ரன்கள் 102.44 பேட்டிங் ஸ்டிரைக் ரேட்டில் விளையாடி இருக்கிறார். தற்போது இவர் மீது எந்த விமர்சனமும் வெளி வராத நிலையில் விராட் கோலி சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய போது மட்டும் ஸ்டிரைக் ரேட் குறித்து விமர்சனங்கள் வெளிவந்தது ஏன்? ருத்ராஜ் அணியின் சூழ்நிலைக்கு தகுந்தவாறு விளையாடியிருக்கிறார் என்றால் விராட் கோலி மட்டும் அணிக்கு தகுந்தவாறு விளையாடவில்லையா? இதுபோன்று பேசுவது முற்றிலும் தவறு.
ருத்ராஜ்க்கு ஒரு நியாயம் விராட் கோலிக்கு மட்டும் ஒரு நியாயமா? இது போன்ற விமர்சனங்கள் ஏற்றுக் கொள்ள முடியாதது” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். தற்போது இவரது வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆக்கி வருகின்றனர். முந்தைய போட்டிகளில் விராட் கோலி மெதுவாக விளையாடிய போது பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அவரது பேட்டிங் குறித்து பல விமர்சனங்களை எழுப்பி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:சேப்பாக்கத்தில் சின்ன தல.. தோனி சுரேஷ் ரெய்னாவுக்கு செய்த செயல்.. நெகிழ்ச்சியில் ரசிகர்கள்.. வைரலாகும் வீடியோ
தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆறு போட்டிகளில் வெற்றி பெற்று தனது கடைசி போட்டியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாட இருக்கிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் சென்னை அணி பிளே ஆப் சுற்றுத் தகுதி பெறும்.

