வருண் சக்கரவர்த்தி இதனால் தான் டி20 உலக கோப்பைக்கு தேர்வாகவில்லை.. ரகசியம் உடைக்கும் அபிஷேக் நாயர்

அமெரிக்காவில் தற்போது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தனது முதல் போட்டியில் அயர்லாந்து அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணிக்கு எதிரான அடுத்த போட்டிக்கு ஆயத்தமாகி வருகிறது.

- Advertisement -

இந்த நிலையில் உலக கோப்பைக்கு முன்பாக இந்திய அணி வீரர்கள் அறிவித்த போது அதில் ஒரு தமிழக வீரர் கூட இடம்பெறவில்லை என்ற சர்ச்சை எழுந்தது. தற்போது அதற்கான காரணம் குறித்து அபிஷேக் நாயகர் தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

டி20 உலக கோப்பை காண இந்திய அணி அறிவிக்கப்பட்ட போது அதில் எந்த ஒரு தமிழக வீரர் பெயரும் இடம் பெறவில்லை. குறிப்பாக வேகப்பந்துவீச்சாளர் நடராஜன் மற்றும் சுழற் பந்துவீச்சாளரான வருண் சக்கரவர்த்தி ஆகியோர் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டனர். இருந்த போதிலும் அவர்களது பெயர்கள் உலகக் கோப்பையில் தேர்வு செய்யவில்லை.

- Advertisement -

தமிழகத்தின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களது அதிருப்தியை தெரிவித்து இருந்தனர். இதில் முன்னாள் கிரிக்கெட் வீரரான சுப்பிரமணியம் பத்ரிநாத் வெளிப்படையாகவே தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார். இத்தனைக்கும் அவர்கள் இருவரும் டி20 போட்டிகளில் சிறப்பாக பந்து வீசி அதிக அளவிலான விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்கள்.

இந்த நிலையில் வருண் சக்கரவர்த்தி இடம்பெறாதது குறித்து கொல்கத்தா அணியின் பயிற்சியாளரான அபிஷேக் நாயக் கூறும் பொழுது
“வருண் சக்கரவர்த்தி ஒவ்வொரு வருடமும் விஜய் ஹசாரே ட்ராபி வரை சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். ஆனால் தேர்வாளர்கள் அவரை பேட்டிங் மற்றும் பீல்டிங் துறைகளில் முன்னேற்றம் காண வேண்டும் என்று கூறி வந்திருக்கிறார்கள். இதுதான் ஒரு வீரரை இந்திய அணியில் தேர்வு செய்வதற்கான அடிப்படையாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

மேலும் வருண் சக்கரவர்த்தி விஜய் ஹசாரே டிராபியில் ரன் எடுத்தததை அனுப்பி வைத்தார். வீரர்களும் மூன்று துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டால்தான் இந்திய அணியில் இடம் பெற முடியும் என்ற மனநிலைக்கு வந்திருக்கிறார்கள். அவர்களின் தேவை என்னவென்று தற்போது நன்றாக புரிந்திருக்கிறது. தற்போது வருமண் சக்கரவர்த்தி பில்டிங் துறையிலும் முன்னேற்றம் கண்டு வருகிறார்.

இதையும் படிங்க:மோசமான விபத்தில் இருந்து மீண்டு வருவது சாதாரண விஷயம் அல்ல.. ரிஷப் பண்ட்டை பாராட்டும் தினேஷ் கார்த்திக்

வீரர்கள் மூன்று துறைகளிலும் முன்னேற்றம் காணும் போது நீங்கள் ஒரு துறையில் மட்டும் முன்னேற்றம் கண்டு இந்திய அணியில் இடம் பிடிப்பது சாதாரணமான விஷயம் கிடையாது” என்று அபிஷேக் நாயர் கூறியிருக்கிறார். வருண் சக்கரவர்த்தி இதற்கு முன்னால் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் இடம் பெற்றிருந்தார். ஆனால் நடராஜன் இதுவரை எந்த ஐசிசி தொடரிலும் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles