ரோஹித் மட்டமான கேப்டன்சி.. எரிச்சலாக இருக்கிறது.. நான் பயிற்சியாளராக இருந்தால் இதெல்லாம் நடந்து இருக்குமா.. கோபத்தில் கொதிக்கும் ரவி சாஸ்திரி

தென்னாபிரிக்கா – இந்தியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்சூரியன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென்னாபிரிக்கா முதலில் பந்து வீசியது. இந்திய வீரர்களை பெரிதாக அடிக்கவிடாமல் 245 ரன்களுக்கு சுருட்டியது.

- Advertisement -

இந்திய அணியை இந்த சுமாரான ஸ்கோருக்கு அழைத்துச் சென்று முழு பாராட்டும் கே.எல்.ராகுலுக்கு மட்டுமே சேரும். தென்னாபிரிக்கா மண்ணில் அவர்களுக்கு எதிராக சதம் விளாசுவது சாமான்யம் அல்ல. 14 பவுண்டரி, 4 சிக்சர் என மொத்தம் 101 ரன்கள் அடித்தார். மற்ற வீரர்களில் விராட் கோலி 38, ஷ்ரேயாஸ் ஐயர் 31, தாக்கூர் 24 ரன்கள் சேர்த்து ஓரளவு சமாளித்தனர். சிறப்பாக பந்துவீசிய ரபாடா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

- Advertisement -

தொடர்ந்து ஆடிய தென்னாபிரிக்கா அணி 13 ரன்னில் முதல் விக்கெட்டை இழந்தது. துவக்க வீரர் மார்க்கரம் 5 ரன்னில் பெவிலியன் திரும்பினார். அதன் பிறகு ஜோடி சேர்ந்த எல்கர் – ஜோரி மல மலவென ரன்கள் சேர்த்தனர். ஒரு கட்டத்தில் விக்கெட்டுகள் இல்லை என்றாலும் பரவாயில்லை ரன்கள் கொடுக்காமல் போடுங்கள் எனும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

- Advertisement -

உணவு இடைவேளையின் போது 49/1 ரங்களில் இருந்த தென்னாபிரிக்கா அணி இரண்டாவது செசனில் முதல் 8 ஓவர்களில் 42 ரன்கள் திரட்டி வசதியான நிலையில் அமர்ந்தது. இந்த ஓவர்களை பிரதித் கிருஷ்ணா மற்றும் தாக்கூர் வீசினர். கேப்டன் ரோஹித் சர்மாவின் இந்த கேப்டன்சியை முன்னாள் கிரிக்கெட் மற்றும் வல்லுநர் ரவி சாஸ்திரி தாக்கியுள்ளார்.

அவர் கோபத்துடன், “ புதிய செசனை துவங்கி போது தாக்கூர் மற்றும் கிருஷ்ணாவை வைத்து யாரும் துவங்க மாட்டார்கள். ரோஹித் ஷர்மாவின் இந்த அணுகுமுறை எனக்கு எரிச்சலைத் தருகிறது. ” எனக் கூறினார். மேலும், தான் பயிற்சியாளராக இருந்த போது சிறந்த இரு பந்துவீச்சாளர்களை வைத்து துவங்கினோம் என்றார்.

- Advertisement -

அதன் பின்னர் பும்ரா வந்து அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகள் எடுத்து இந்திய அணியை மீட்டார். இதைத் தான் ரோஹித் ஷர்மா முதலிலேயே செய்து இருக்க வேண்டும் என முன்னாள் தென்னாபிரிக்கா ஆல்ரவுண்டர் பிலெண்டரும் தெரிவித்தார். இதைத் தாமதமாக செய்ததால் தென்னாபிரிக்கா அணி நல்ல மொமண்டமை வைத்து ரன்கள் சேர்த்துக் கொண்டது.

இரண்டாம் நாள் முடிவில் தென்னாபிரிக்கா அணி 11 ரன்கள் முன்னிலையில் 256/5 என முடித்துள்ளது. டீன் எல்கர் 140 ரன்களில் களத்தில் உள்ளார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles