நேற்று நடந்த பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எட்டாவது தோல்வியை சந்தித்து பிளே ஆப் சுற்றில் இருந்து வெளியேறி இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆரோன் பின்ச் எம்எஸ் தோனி குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 10 போட்டிகளில் விளையாடி இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி மற்றும் எட்டு போட்டிகளில் தோல்வி தோல்வி புள்ளிகள் பட்டியலில் பத்தாவது இடத்தில் இருக்கிறது. கிட்டத்தட்ட பிளே ஆப் சுற்றை விட்டு வெளியேறிய நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலமாக அதிகாரப்பூர்வமாக வெளியேறி இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிரிஸ்ட் எம்.எஸ். தோனி அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் விளையாட கூடாது என்று கூறி இருந்தார். மேலும் இனி அடுத்தடுத்து நடைபெற உள்ள போட்டிகளில் சிஎஸ்கே மிகவும் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் எனவும் வேறு யாரிடமாவது கேப்டன் பொறுப்பை ஒப்படைத்து விட்டு தோனி ஓய்வு பெறுவார் என்று கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆரோன் பின்ச் எம் எஸ் தோனி அப்படி செய்வதற்கு வாய்ப்பு இல்லை என்றும் அடுத்த ஆண்டு அவர் கட்டாயம் விளையாடுவார் எனவும் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார். மேலும் கடந்த போட்டியில் டாஸ் போடுவதற்கு முன்பாக வர்ணனையாளர் டேனி மாரீசன் தோனியிடம் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவீர்களா என்று கேட்டதற்கு பதில் அளித்த தோனி, அடுத்த போட்டியில் விளையாடுவேனா என்று கூட தெரியவில்லை என்று நகைச்சுவையாக கூறி இருக்கிறார்.
இதற்கு ஆரோன் பின்ச் கூறும் போது “இது எதுவுமே நடைபெறுவது கிடையாது. டானி ஏற்கனவே தோனியிடம் ஓய்வு குறித்து கேட்டறிந்ததற்கு தோனி அதற்கு சிறப்பான முறையில் பதில் அளித்திருக்கிறார். எனவே இது இந்த முறையும் தொடர்ந்து இருக்கிறது அப்படித்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். இதனால் தோனி அடுத்த ஆண்டு நிச்சயமாக தொடர்ந்து விளையாடுவார். சிஎஸ்கே அணியை பாதியில் விட்டுச் செல்ல மாட்டார்” என்று அவர் பேசி இருக்கிறார்.

