அடுத்த வருஷம் எம்எஸ் தோனி சிஎஸ்கேவுக்கு நிச்சயம் விளையாடக்கூடாது.. இந்த காரணத்தை அவர் புரிஞ்சுக்கவாருன்னு தோணுது – ஆடம் கில்கிரிஸ்ட் கருத்து

முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று இரவு நடைபெற உள்ள ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து மகேந்திர சிங் தோனி தலைமையில் விளையாட உள்ளது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் முன்னாள் பஞ்சாப் கிங்ஸ் வீரரான ஆடம் கில்கிரிஸ்ட் எம் எஸ் தோனி அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடக் கூடாது என்பதற்கான காரணத்தை கூறி இருக்கிறார்.

- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஐபிஎல் தொடரில் மொத்தமாக ஒன்பது போட்டிகள் விளையாடி அதில் 7 போட்டிகள் தோல்வி மற்றும் 2 போட்டிகள் வெற்றி என புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. ஏறக்குறைய பிளே ஆப் சுற்றில் இருந்து வெளியேறி விட்ட நிலையில் இனி வரும் போட்டிகளில் வெற்றி பெற்று ஓரளவு நல்ல முறையில் தொடரை முடிக்க சிஎஸ்கே கட்டாயம் விரும்பும். மேலும் எம்எஸ் தோனி இந்த முறை கேப்டன் ஆக செயல்பட்டும் சரியான வீரர்கள் இல்லாத காரணத்தால் அந்த அணி தொடர்ச்சியான தோல்வியை சந்தித்து வருகிறது.

- Advertisement -

சில போட்டிகளுக்கு முன்பாக எம்எஸ் தோனி இந்த ஆண்டு ஏறக்குறைய முடிந்து விட்டது எனவே அடுத்த வருடத்திற்கான வீரர்கள் தேர்வில் கவனம் செலுத்தப் போகிறோம் என்று ஏற்கனவே கூறியிருந்தார். இதனால் எம்எஸ் தோனி இந்த ஆண்டும் ஓய்வு பெறாமல் அடுத்த ஆண்டும் விளையாடப் போகிறார் என சூசகமாக தெரிகிறது. இந்த சூழ்நிலையில் முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மற்றும் முன்னாள் பஞ்சாப் கிங்ஸ் வீரரான ஆடம் கில்கிரிஸ்ட் எம்எஸ் தோனி அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாட கூடாது என அதற்கான காரணத்தை கூறி இருக்கிறார்.

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “தற்போது எம்எஸ் தோனியை பொருத்தவரை கிரிக்கெட்டில் யாருக்கும் நிரூபிக்க வேண்டும் என்கிற அவசியம் கிடையாது. மேலும் அவருக்கு எது சரி? எது தவறு? என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்பது நன்றாகவே தெரியும். எனது அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் அவர் எதையும் நிரூபித்து காட்ட வேண்டும் என்கிற அவசியம் இல்லை. எனவே அடுத்த ஆண்டு தோனி ஒரு வீரராக சிஎஸ்கே அணியில் இருக்கக் கூடாது. அவர் ஓய்வு பெற வேண்டும். எம் எஸ் தோனி ஒரு ஐகான் ஐ லவ் யூ” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க:எனக்கு பயம் இல்லை.. யார் என்ன செய்வாங்கன்னு யோசிக்க மாட்டேன்.. களத்திற்கு வந்தா என் கவனம் இதுதான்.. 14 வயதில் சாதனை சதம் அடித்த வைபவ் பேட்டி

இந்த ஆண்டு காயம் காரணமாக ருத்ராஜ் தொடரிலிருந்து முழுவதுமாக வெளியேறி இருந்த நிலையில் அவருக்கு பதிலாகவே எம்எஸ் தோனி வேறு வழியில்லாமல் கேப்டன் பொறுப்பை ஏற்று அணியை வழி நடத்தி வருகிறார். எனவே அடுத்த ஆண்டு அவர் விளையாட மாட்டார் எனவும் ரசிகர்கள் தரப்பில் கூறப்பட்டு வருகிறது. இருப்பினும் வீரர்கள் தேர்விலும் சிஎஸ்கே நிர்வாகம் தற்போது சொதப்பி இருக்கும் நிலையில் அணியின் நலனை கருத்தில் கொண்டு அடுத்த ஆண்டு விளையாடுவாராm அல்லது ஓய்வு பெறுவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles