சூரியகுமார் யாதவும் இந்த லிஸ்ட்ல இப்போ வந்திருக்காரு.. மும்பை அணியில் தொடர்ந்து பெரிதாகும் விரிசல்.. கலக்கத்தில் ரசிகர்கள்

இந்த ஐபிஎல் தொடர் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மோசமான தொடராகவே அமைந்திருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். இதுவரை விளையாடிய 13 போட்டிகளில் ஒன்பது போட்டிகளில் தோல்வி அடைந்து நான்கு போட்டிகள் மட்டுமே வெற்றி பெற்று முதல் அணியாக பிளே ஆப் சுற்றில் இருந்து வெளியேறி இருக்கிறது.

- Advertisement -

இந்த மும்பை இந்தியன்ஸ் மோசமான தோல்விகளுக்கு காரணம் ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சிதான் என்று அனைவரும் கூறி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் ரோகித் சர்மாவை தொடர்ந்து சூரிய குமார் யாதவும் மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து விலகப் போவதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளிவருகிறது.

- Advertisement -

இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியின் மோசமான தோல்விகளுக்கு காரணம் அணி வீரர்களுக்கிடையேயான ஒற்றுமையின்மை என்று கூறப்படுகிறது. மேலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்குள் இரண்டு பிரிவுகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது ஒரு பிரிவில் ரோஹித் சர்மா, பும்ரா, சூரியகுமார் யாதவ் ஆகியோரும் மற்றொரு பிரிவில் இளம் வீரர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் இசான் கிசான் ஆகியோரும் இருக்கின்றனர்.

- Advertisement -

மேலும் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களும் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக இருப்பதால் அவர் மன ரீதியாகவும் பாதிப்படைந்திருப்பதாக தெரிகிறது. இதன் எதிரொளியாக பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலுமே ஹர்திக் பாண்டியா சொதப்பினார். மேலும் டி20 உலக கோப்பையில் ஹர்திக் பாண்டியா சேர்க்கப்பட்டது ரோகித் சர்மாவுக்கு மகிழ்ச்சி இல்லை என்பது போல் தெரிகிறது.

பிசிசிஐ இன் கூடுதல் அழுத்தத்தின் காரணமாகவே ஹர்திக் பாண்டியா திரும்பவும் அணிக்குள் கொண்டுவரப்பட்டார். ஆனால் இதில் ரோகித் சர்மாவுக்கு சுத்தமாக உடன்பாடு இல்லை என்றும் இதனால் வருகிற டி20 உலக கோப்பையோடு அவர் ஓய்வு பெற போவதாகவும் தகவல் வெளியாகியது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் கொல்கத்தா மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது பயிற்சியில் ஈடுபட்டிருந்த ரோகித் சர்மா மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோர் ஹர்திக் பாண்டியா பயிற்சி பெற மைதானத்திற்குள் வந்தவுடன் அங்கிருந்து இவர்கள் இருவரும் கிளம்பி விட்டதாக தகவல் வெளியாகியது. மேலும் கொல்கத்தா அணி வீரர்களுடனும் மற்றும் அணியின் துணை பயிற்சியாளர் இடமும் ரோகித் சர்மா பேச்சுவார்த்தை நடத்தியதால் அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அடுத்த ஆண்டு விளையாடப் போவதில்லை என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:அந்த ஒரு போட்டினால எங்க பிளே ஆப் கனவு மொத்தமா சிதைந்து போச்சு.. வெற்றிக்குப் பின்னர் ரிஷப் பண்ட் பேட்டி

இந்த சூழ்நிலையில் தற்போது ரோகித் சர்மாவை தொடர்ந்து சூரியகுமார் யாதவும் அடுத்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடப் போவதில்லை என முடிவு செய்திருப்பதாக ஒரு தகவல் வெளி வருகிறது. ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்ஷியில் சூரியக்குமார் யாதவிற்கு தனிப்பட்ட முறையில் உடன்பாடு இல்லை. இதனால் அவரும் இந்த முடிவை எடுத்திருப்பதாக தகவல். ஏற்கனவே ரோகித் சர்மாவும் வெளியேற உள்ள நிலையில், தற்போது சூரியகுமார் யாதவும் இந்த முடிவை எடுத்திருப்பதால் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் தற்போது கலக்கத்தில் உள்ளனர்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles