லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடலஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் 19 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது. இருப்பினும் அந்த அணியால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியவில்லை.
இந்த காரணம் குறித்து ரிசப் பண்ட் தனது ஆதங்கத்தை தெரிவித்து இருக்கிறார். மேலும் காயத்தில் இருந்து மீண்டு வந்து தன்னை களத்தில் நிறுத்திக்கொள்ள விரும்புவதாகவும் கூறியிருக்கிறார்.
டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் சொந்த மைதானத்தில் நடைபெற்ற இப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் குவித்தது. அந்த அணியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜேசர் மெக்கர்க் இந்த முறை ரன்கள் ஏதுமின்றி அதிர்ச்சி அளித்து வெளியேறினார்.
பின்னர் சூழ்நிலையை உணர்ந்த மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் பொரேல் மற்றும் சாய் கோப் ஆகியோர் டெல்லி அணியின் ரன் ரேட்டை நன்றாக உயர்த்தினார்கள். பொரேல் 33 பந்துகளில் 58 ரன்களும், சாய் ஹோப் 27 பந்துகளில் 38 ரன்கள் குவித்தனர். பின்னர் இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடிய ஸ்டெப்ஸ் மூன்று பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்களுடன் 57 ரன்கள் குவித்தார்.
இவரின் அதிரடியுடன் டெல்லி அணி 200 ரன்களைக் கடந்தது. பின்னர் வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய லக்னோ அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது அந்த அணியின் பூரான் மற்றும் அர்சத் க்கான ஆகியோர் கடைசிவரை போராடியும் வெற்றி இலக்கை அடைய முடியவில்லை. பூரான் 61 ரன்களும் அர்சத் தான் 58 இடங்களிலும் குவித்தனர்.
இந்த வெற்றிக்கு பின்னால் டெல்லி அணியின் கேப்டன் பண்ட் கூறும் பொழுது
“இறுதிக்கட்டத்தில் பூரான் மற்றும் அர்ஷத் கான் ஆகியோர் அதிரடியாக விளையாடி போட்டியை எங்களிடம் எடுத்துச் செல்ல வாய்ப்பு இருந்தது. எங்கள் திட்டங்களை செயல்படுத்தினோம். எங்களது ஸ்கோர் வெற்றி பெற போதுமானதாகவும் இருந்தது. நாங்கள் நல்ல பந்துகளை வீசினோம் என்று நினைக்கிறேன். இந்த சீசனின் ஆரம்பத்தில் நல்ல நம்பிக்கை இருந்தது.
இதையும் படிங்க:நாங்க தொடர்ந்து இந்த ஒரே தவறை செஞ்சுட்டு வர்றோம்.. அதுதான் இந்தப் போட்டியிலும் தோற்க காரணம்.. காரணத்தை விளக்குகிறார் கே எல் ராகுல்
நான் கடைசி போட்டியில் தடை பெறாமல் இருந்திருந்தால் நாங்கள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற ஒரு நல்ல வாய்ப்பாக இருந்திருக்கும். ஆனால் தனிப்பட்ட முறையில் நான் திரும்பி வந்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்திய மக்கள் தரும் ஆதரவை பார்க்கும் போது எனக்கு உண்மையிலேயே சந்தோஷமாக உள்ளது. இதற்காக ஒன்றரை வருடங்கள் காத்திருந்தேன். என்னை களத்தில் நீண்ட நேரம் நிறுத்திக் கொள்ளவே விரும்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

