நாங்க தொடர்ந்து இந்த ஒரே தவறை செஞ்சுட்டு வர்றோம்.. அதுதான் இந்தப் போட்டியிலும் தோற்க காரணம்.. காரணத்தை விளக்குகிறார் கே எல் ராகுல்

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி அணி லக்னோ அணியை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தனது ஏழாவது வெற்றியை பதிவு செய்தது. இந்த நிலையில் தோல்விக்கான முக்கியக் காரணம் குறித்து லக்னோ அணியின் கேப்டன் கே எல் ராகுல் பேசியிருக்கிறார்.

- Advertisement -

அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி இருபது ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் குவித்தது. டெல்லி அணியில் அதிகபட்சமாக அபிஷேக் பொரேல் 33 பந்துகளில் 58 ரன்களும், சாய் கோப் 27 பந்துகளில் 38 ரன்களும், பன்ட் 23 பந்துகளில் 33 ரன்கள் இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடிய ஸ்டெப்ஸ் 25 பந்துகளில் 57 ரன்களும் குவித்தனர்.

- Advertisement -

இதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி லக்னோ அணி களம் இறங்கியது. ஆனால் பவர் பிளேவிற்குள் 4 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 44 ரன்கள் மட்டுமே குவித்ததால் இறுதியில் அந்த அணியால் மீண்டு வர முடியவில்லை. இருப்பினும் நிக்கோலஸ் பூரான் அபாரமாக விளையாடி 27 பந்துகளில் 61 ரன்கள் குவித்தார். பின்னர் இறுதியில் களமிறங்கிய பந்துவீச்சாளர் ஹர்ஷத் கான் 33 பந்துகளில் 58 ரன்கள் விளாசினார். இதில் 5 சிக்சர்கள் அடங்கும்.

- Advertisement -

இதன் மூலம் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் மூலம் டெல்லிக்கு இது ஏழாவது வெற்றியாக அமைந்திருக்கிறது. வெற்றி பெற்றாலும் ரன் ரேட் அடிப்படையில் அந்த அணி பிளே ஆப் சுற்றிலும் இருந்து வெளியேறுகிறது. தோல்வி அடைந்த லக்னோ அணியும் பிளே ஆப் சுற்று வாய்ப்பிலிருந்து வெளியேறுகிறது.

இந்த தோல்விக்கு பின்னர் லக்னோ அணியின் கேப்டன் கே எல் ராகுல் கூறும் பொழுது
“இந்த ஆடுகளம் நாற்பது ஓவர்கள் வரை ஒரே மாதிரி தான் இருக்கும் என்று நினைத்திருந்தேன். டெல்லி அணி பேட்டிங்கில் நாங்கள் பிரேசர் மெக்கர்கை விரைவிலேயே வெளியேற்றினோம். அபிஷேக் மற்றும் சாய் ஹோப் ஆகியோர் சிறப்பாக விளையாடினார்கள். அதற்குப் பின்னர் எங்களது பந்துவீச்சு அருமையாக இருந்தது. 200 ரன்கள் என்பது எடுத்திருக்கக்கூடிய இலக்கு தான்.

- Advertisement -

நாங்கள் தொடர்ந்து பவர் பிளேவில் விக்கெட்டுகளை இழந்து வருகிறோம். இதனால் பூரான் மற்றும் ஸ்டாய்னிஸ் ஆகியோரிடம் இருந்து சிறந்த ஆட்டத்தை எங்களால் வெளிக்கொண்டுவர முடியவில்லை. இதுவே எங்கள் தோல்விக்கும் காரணமாக அமைகிறது. நாங்கள் தற்போது இந்த மோசமான நிலையில் இருப்பதற்கு காரணமும் இதுதான்” என்று கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க:வெற்றி பெற்றும் சோகம்.. பிளே ஆப் சுற்றை விட்டு வெளியேறுகிறது டெல்லி அணி.. 19 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தியது

14 போட்டிகளிலும் விளையாடிவிட்ட லக்னோ அணிக்கு இன்னும் ஒரு போட்டி மீதம் இருப்பதால் வருகிற வெள்ளிக்கிழமை மும்பை இந்தியன்ஸ் அணியுடன் எதிர்கொள்ள உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி உடன் ஆறுதல் வெற்றி பெற்று இந்த தொடரை முடிப்பதற்கு லக்னோ அணி முயற்சிக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles