டெல்லி வெற்றி.. மாறிய பிளே ஆப் வாய்ப்புகள்.. ஆர்சிபி, சிஎஸ்கே ஹைதராபாத் அணிகளுக்கு டிவிஸ்ட்

நேற்று நடைபெற்ற லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் டெல்லி அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தியது. தற்போது ஏழு வெற்றிகளை பெற்றிருக்கும் டெல்லி அணி புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

- Advertisement -

இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணியும், லக்னோ அணி தோல்வி அடைந்திருந்தாலும் மற்ற அணிகளின் முடிவுகளைப் பொறுத்து இந்த இரண்டு அணிகளும் பிளே ஆப் வாய்ப்பில் இன்னமும் நீடிக்கிறது. புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பொருத்தவரை கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் உள்ளன.

- Advertisement -

கொல்கத்தா அணியின் நெட் ரன் ரேட் நல்ல நிலையில் இருப்பதால் எப்படியும் முதல் இரண்டு இடங்களுக்குள் இருக்கும். ராஜஸ்தான் அணிக்கு அடுத்த இரண்டு போட்டிகள் இருப்பதால் அதில் வெற்றி பெற்று முதல் இரண்டு இடங்களுக்குள் முன்னேற முயற்சிக்கும். இப்போது மூன்றாவது மற்றும் நான்காவது இடத்திற்கு கிட்டத்தட்ட ஐந்து அணிகள் போட்டி போடுகின்றன.

- Advertisement -

சன்ரைசர்ஸ் அணியை பொறுத்தவரை தற்போது 12 போட்டிகளில் ஏழு வெற்றிகளை பெற்றுள்ளது. தற்போது அந்த அணிக்கு குஜராத் அணியிடனும் பஞ்சாப் அணியுடன் போட்டிகள் உள்ள பட்சத்தில் இந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற முயற்சிக்கும். மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையே கடைசி ஒரு லீக் போட்டி இருப்பதால் அதில் வெற்றி பெறும் அணி நான்காவது அணியாக முன்னேற அதிக வாய்ப்புள்ளது.

ஏனென்றால் இரண்டு அணிகளின் நெட் ரன் ரேட் தற்போது நல்ல நிலையில் உள்ளது. அதிலும் பெங்களூரு அணியை விட சென்னை அணியின் ரன் ரேட் சிறப்பாக இருப்பதால் இந்த போட்டியில் வெற்றி பெற்றாலே போதும். ஆனால் பெங்களூர் அணி சில ஓவர்களுக்கு முன்னரே வெற்றி பெற வேண்டியது அவசியம்.

- Advertisement -

பஞ்சாப் அணியில் முன்னணி வீரர்கள் விலகுவதால் சன்ரைசர்ஸ் அணிக்கு வெற்றி அவ்வளவு கடினமாக இருக்காது என்றே தோன்றுகிறது. மேலும் குஜராத் அணியைவிட சன்ரைசர்ஸ் அணி வலுவாக இருப்பதால் இந்த இரண்டு போட்டியிலும் சன்ரைசர்ஸ் கையே அதிகமாக ஓங்கி உள்ளது. டெல்லி அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால் மற்ற அணிகளை சார்ந்திருக்க வேண்டிய நிலைமை உள்ளது. சென்னை பெங்களூர் மற்றும் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோசமான ரன் ரேட்டில் தோல்வி அடைய வேண்டும்.

அப்படி தோல்வி அடையும் பட்சத்தில் அனைத்து அணிகளும் 14 புள்ளிகளை பெறும் போது டெல்லி அணியின் ரன் ரேட்டை விட மோசமாக இருந்தால் மட்டுமே டெல்லி அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும். லக்னோ அணிக்கும் ஒரு வாய்ப்பு இருப்பதால் மேலே கூறியது போல அனைத்து அணிகளும் மோசமாக தோற்க வேண்டும். அப்படி தோற்கும் போது லக்னோ அணிக்கும் ஒரு வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles