நேற்று சிஎஸ்கே அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணியிடம் தோல்வி அடைந்தது. ருதுராஜ் தலைமையில் இதுவரையில் சிஎஸ்கே அணி தொடர்ந்து ஏழு போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது.
இந்த போட்டியில் 19ஆவது ஓவரை ஜேமி ஓவர்டன்னுக்கு ருதுராஜ் கொடுத்தார். அந்த ஓவரில் டிம் டேவிட் மொத்தம் 30 ரன்கள் எடுத்தார். கடைசி கட்ட ஓவர்களுக்கு யாரை பயன்படுத்துவது என்பது குறித்த தெளிவு அவரிடம் இல்லை.
குறிப்பாக அன்சூல் காம்போஜ் மற்றும் மேட் ஹென்றி இருவர்தான் இந்த வேலைக்கு சரியானவர்கள். மேட் ஹென்றி சர்வதேச அனுபவத்துடன் நியூசிலாந்து அணிக்கு இறுதி கட்ட ஓவர்களில் கொஞ்சம் சிறப்பான முறையில் செயல்பட்டு இருக்கிறார். எனவே இப்போது இருக்கும் நிலையில் அவரை விட்டால் வேறு யாரும் கிடையாது.
அடுத்து ஐந்தாவது பவுலர் கோட்டாவை சமயம் பார்த்து கச்சிதமாக முடிக்க வேண்டும். மேலும் அணியில் உள்ள பார்ட் டைம் ஸ்பின்னர்களை எந்த இடத்தில் பயன்படுத்தலாம் என்கின்ற விழிப்புணர்வு இருக்க வேண்டும். ஆனால் இந்த விஷயங்களில் எல்லாம் ருதுராஜ் மிகவும் பின்தங்கி இருக்கிறார். எனவே அவரை கேப்டன் பொறுப்பில் இருந்து மாற்றுவதுதான் சிஎஸ்கே மீண்டும் வருவதற்கான வழி!

