கெயில் டிவில்லியர்ஸ் மாதிரி அபிஷேக் ஷர்மா ஆடுனாரு.. இதுக்கு முன்னாடி இப்படி ஒரு இன்னிங்ஸ் பார்த்ததே இல்லை – இங்கிலாந்து கோச் புகழாரம்

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா அபாரமாக விளையாடி சதம் அடித்து இந்திய அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பிரண்டன் மெகெல்லம் அபிஷேக்சர்மா விளையாடியது குறித்து சில முக்கிய கருத்துகளை தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா முதல் பந்தில் இருந்து தனது அதிரடி காட்ட ஆரம்பித்தார். 17 பந்துகளில் தனது அரை சதத்தை கடந்த நிலையில் அடுத்த 20 பந்துகளில் தனது சதத்தை பூர்த்தி செய்தார். இதில் ஏழு பவுண்டரிகள் மற்றும் 13 சிக்ஸர்கள் அடங்கும். அவர் விளையாடுவதை இந்திய முன்னாள் வீரர்கள் அனைவரும் பாராட்டிய நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு முக்கிய கருத்தை கூறினார்.

- Advertisement -

அதாவது அபிஷேக் சர்மாவின் ஆட்டத்தை டிக்கெட் வாங்கிக் கொண்டு மைதானத்திற்கு சென்று பார்க்கும் அளவுக்கு நான் பெரிய ரசிகனாகி விட்டேன் என்று கூறியிருக்கிறார். இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக திகழும் பிரண்டன் மெகெல்லம் அபிஷேக்சர்மா விளையாடியது டி20 போட்டியை பொறுத்தவரை இப்படி ஒரு இன்னிங்ஸ் பார்த்ததில்லை என்று அதற்கான காரணத்தை கூறியிருக்கிறார்.

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “முதலில் அபிஷேக் ஷர்மாவிடம் நான் பார்த்தது என்னவென்றால் டி20 இன்னிங்ஸ்களில் நான் இதுவரை பார்க்காத ஒன்றாக இது அமைந்துள்ளது. குறிப்பாக அவர் சாதாரண பந்துவீச்சுக்கு எதிராக இதை செய்யவில்லை. மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடிய பந்து வீச்சாளர்களுக்கு எதிராக இதை செய்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஒரு லெக் ஸ்பின்னர் என சிறந்த பந்துவீச்சுக்கு எதிராக இதை செய்திருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க:என் வீட்டில் 4 வயது பும்ரா இருக்கிறார்.. அவர்தான் எனக்கு பவுலிங் போடுறாரு – ஆஸி வீரர் மிட்சல் மார்ஸ் கலகல பேட்டி

ஒருவர் இப்படி பேட்டிங் செய்யும்போது உங்களிடம் உள்ள அனைத்து திட்டங்களையும் முயற்சி செய்து பார்ப்பீர்கள். ஒருவர் இப்படி விளையாடிக் கொண்டிருக்கும்போது உங்களால் அதை தடுக்கவே முடியாது. கெயில், பின்ச் மற்றும் டிவில்லியர்ஸ் ஆகியோர் பல வருடங்களாக கிரிக்கெட்டில் இதை செய்ததை நாம் பார்த்திருக்கிறோம். இது போன்ற வீரர்களில் ஒருவராக அபிஷேக் ஷர்மா தனது கைகளை உயர்த்தி இருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles