இந்திய கிரிக்கெட்டில் மகத்தான வேகப்பந்து வீச்சாளராக திகழ்பவர் ஜஸ்பிரித் பும்ரா. ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தனது அபாரமான வேகப்பந்து வீச்சை வெளிப்படுத்தி பெரிய கவனத்தை ஈர்த்தார்.
இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியாவின் ஆல்ரவுண்டர் மிட்சல் மார்ஸ் பும்ரா குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இந்திய கிரிக்கெட்டின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளராக திகழ்பவர் ஜஸ்பிரித் பும்ரா. பல போட்டிகளில் திறமையாக பந்து வீசி இந்திய அணியை இக்கட்டான சூழ்நிலைகளில் இருந்து காப்பாற்றி இருக்கிறார். சமீபத்தில் நடைபெற்ற முடிந்த டி20 உலக கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் தனது அபாரமான பந்துவீச்சின் மூலமாக உலகக்கோப்பை வெல்ல முக்கிய காரணமாக அமைந்தவர்.
அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் நடைபெற்ற முடிந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் 32 விக்கெட்களை வீழ்த்தி ஆஸ்திரேலிய வீரர்களை பெரிய அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கினார். இதில் எதிர்பாராதவிதமாக கடைசி டெஸ்ட் போட்டியில் அவருக்கு காயம் ஏற்பட்டது. ஒருவேளை அவர் விளையாடி இருந்தால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி நிச்சயமாக டிரா செய்திருக்கும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகிறார்கள். ஆஸ்திரேலியாவில் கடந்த 2024 ஆம் ஆண்டு கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்ட வீரர் வீராங்கனைகளுக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சார்பில் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட மிட்சல் மார்ஸ் பும்ரா குறித்து சில முக்கிய கருத்தை தெரிவித்து இருக்கிறார். அதாவது அவரது சகோதரியின் மகனுடன் ஒருநாள் கிரிக்கெட் விளையாடிய போது பும்ராவின் பந்துவீச்சு சாயலில் தனக்கு பந்து வீசுவதாக தெரிவித்திருக்கிறார் இதைக் கேட்ட மற்ற வீரர்கள் சிரிப்பில் அரங்கம் சிரிப்பலையில் அதிர்ந்தது.
இதையும் படிங்க:பும்ரா அணியில் இல்லை.. சூரியகுமார் யாதவ் நீக்கம்.. மீண்டும் வந்த கோலி, ரோஹித் – இங்கிலாந்து ஒருநாள் தொடருக்கான இந்திய அணி !
இதுகுறித்து அவர் கூறும் பொழுது “என்னுடைய சிறிய மாப்பிள்ளை நான்கு வயது மட்டுமே தற்போது நிரம்பி இருக்கிறது. நேரம் கிடைக்கும் சமயங்களில் அவரோடு வீட்டில் கிரிக்கெட் விளையாடுவேன். அப்போது அவர் பும்ராவின் ஆக்சனோடு தனக்கு எதிராக பந்து வீசினார். அவரது மூலமாக பும்ராவின் தாக்கம் எனக்கு தொடர்கிறது” என்று பேசியிருக்கிறார். இதன் மூலமாக இந்திய பந்துவீச்சாளர் ஒருவர் கிரிக்கெட்டில் தலைசிறந்து விளங்கும் ஆஸ்திரேலியார்களின் மனதில் எந்த அளவு இடம் பிடித்திருக்கிறார் என்பது இதன் மூலம் தெளிவாகத் தெரிகிறது.

