விராட் கோலி கோஹினூர் வைரம் என்றால்.. இவர் அவரை விட சிறப்பு மிக்கவர்- தினேஷ் கார்த்திக் பாராட்டு

ஐசிசி தொடர்களில் கடைசியாக மகேந்திர சிங் தோனி தலைமையில் சாம்பியன்ஸ் டிராபி கோப்பை கைப்பற்றிய இந்திய கிரிக்கெட் அணி தற்போது ரோகித் சர்மா தலைமையில் டி20 உலக கோப்பையை கைப்பற்றியுள்ளது.

- Advertisement -

இந்த வெற்றி கொண்டாட்டத்தில் இருக்கும்போது தினேஷ் கார்த்திக் விராட் கோலி கோஹினூர் வைரத்திற்கு சமமானவர் என்றால் இந்த இந்திய வீரர் அவரைவிட சிறந்தவர் என்று குறிப்பிட்டு பேசியிருக்கிறார்.

- Advertisement -

இந்த டி20 உலக கோப்பை தொடரில் விராட் கோலி இறுதிப் போட்டிக்கு முன்பு வரை, ஏழு போட்டிகளில் விளையாடி வெறும் 75 ரன்கள் மட்டுமே குவித்திருந்தார். ரோகித் சர்மா விரைவிலேயே ஆட்டம் இழந்து வெளியேற, அவர் மட்டுமல்லாமல் ரிஷப் பண்ட் மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோரும் அடுத்தடுத்து ஆட்டம் இழக்க, இறுதிப் போட்டியில் சரியான நேரத்தில் கை கொடுத்த விராட் கோலி ஏழு போட்டிகளில் மொத்தமாக அடித்த ரன்களை ஒரே போட்டியில் அடித்தார்.

- Advertisement -

இதனால் இந்திய அணி சவாலான ஸ்கோரை தென் ஆப்பிரிக்க அணிக்கு நிர்ணயித்தது. இருப்பினும் கிளாஸனின் அதிரடி ஆட்டத்தால் வெற்றி இலக்கை அடையும் நேரத்தில், இறுதியாக வந்த பும்ரா பந்துவீச்சில் கடைசி இரண்டு ஓவர்களில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வெற்றி வாய்ப்பை தென் ஆப்பிரிக்க அணியிடமிருந்து அப்படியே இந்தியா வசம் இழுத்துப் பிடித்தார். இந்த சூழ்நிலையால் இந்திய அணி இரண்டாவது முறையாக டி20 உலக கோப்பையை கைப்பற்றியது.

இந்த நிலையில் விராட் கோலி நவ்ஜோத்சிங் சித்து கோஹினூர் வைரத்திற்கு சமமானவர் என்று பாராட்ட, அவரைவிட பும்ரா சிறந்த வீரர் என்று பாராட்டி பேசி இருக்கிறார். தினேஷ் கார்த்திக் விரிவாக கூறும்பொழுது “இறுதிப் போட்டியில் நான் வர்ணனையில் இருந்த போது பும்ராவை கோஹினூர் வைரத்தை விட விலை மதிப்பு மிக்கவர் என்று கூறி இருந்தேன். உண்மையாகவே உலக கிரிக்கெட்டில் அவர் ஆல் டைம் ஃபேவரைட் பவுலர் ஆக திகழ்கிறார்.

- Advertisement -

இக்கட்டான சூழ்நிலைகள் எல்லாம் அணிக்கு நன்றாக செயல்பட்டு வெற்றியை தங்கள் அணி வசம் திருப்பி விட்டு செல்கிறார். இக்கட்டான சூழ்நிலையில்எந்த ஒரு வீரரும் நன்றாக செயல்படத் தவறும் நேரத்தில், அவர் மட்டுமே தொடர்ந்து நன்றாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். எந்த ஒரு போட்டியிலும் இக்கட்டான சூழ்நிலையில் வெற்றி பெற கேப்டன் அவரை பயன்படுத்த விரும்புவார்கள். பும்ரா ஒரு புத்திசாலியான அற்புதமான வீரர் ஆவார்” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க:மலையைக் கடக்க என் ஒருவனால் முடியாது.. உங்கள் ஆக்சிஜன் தேவை.. கோப்பையை வெல்லும் முன் ரோஹித் கூறியதாக சூர்யா பேட்டி

பும்ரா தனது வித்தியாசமான பந்துவீச்சு ஆக்சன் மூலம் தற்போது அனைத்து ஃபார்மேட் கிரிக்கெட் தொடரிலும் தற்போது நம்பர் ஒன் 1 பந்து வீச்சாளராக திகழ்ந்து கொண்டிருக்கிறார். இந்த தொடரில் மொத்தமாக 15 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் தொடர் நாயகன் விருதையும் அவரே பெற்றிருக்கிறார். ஒரு ஐசிசி தொடரில் ஒரு பந்துவீச்சாளர் தொடர் நாயகன் விருது பெறுவது இதுவே முதல் முறையாகும்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles