இது என்னோட ஊரு.. நான்தான் கெத்து.. ஆர்சிபி அணியை ஒற்றை வீரராக வீழ்த்திய கேஎல் ராகுல்

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ஆர்சிபி அணியை எதிர்த்து டெல்லி அணி களமிறங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணி 3 ஓவர்களிலேயே 54 ரன்களை விளாசியது. இதனைத் தொடர்ந்து பில் 37 ரன்களில் ரன் அவுட்டாகி வெளியேற, ஆட்டமே மொத்தமாக மாறியது.

- Advertisement -

டெல்லி தடுமாற்றம்

இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 163 ரன்களை மட்டுமே சேர்த்தது. கடைசி நேரத்தில் ஆடிய டிம் டேவிட் 20 பந்துகளில் 37 ரன்களை விளாசினார். டெல்லி அணி தரப்பில் விப்ராஜ் மற்றும் குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்பின் டெல்லி அணி தரப்பில் டூ ப்ளசி – மெக்கர்க் கூட்டணி தொடக்கம் கொடுத்தது.

- Advertisement -

இதில் டூ ப்ளசி 2 ரன்களிலும், மெக்கர்க் 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து வந்த அபிஷேக் பொரெல் 7 ரன்களில் வெளியேற, டெல்லி அணி 30 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது கேஎல் ராகுல் – அக்சர் படேல் கூட்டணி இணைந்து நிதானமாக ரன்களை சேர்த்தது. இவர்கள் 4வது விக்கெட்டுக்கு 28 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், அக்சர் படேல் 15 ரன்களில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

ராகுலின் கிளாசிக் ஆட்டம்

இதனால் போட்டியின் ஆர்சிபி அணியின் கைகள் ஓங்கியது. ஆனாலும் கேஎல் ராகுல் கொஞ்சம் கூட பதற்றம் கொள்ளாமல் நிதானமாக ரன்களை சேர்த்தார். அவருடன் ஸ்டப்ஸ் இணைந்து நிதானமாக ரன்களை சேர்க்க, டெல்லி அணியின் ஸ்கோர் 14 ஓவர்களில் 99 ரன்களை எட்டியது. அப்போது மழை பெய்ய, டெல்லி அணியின் டிஎல்எஸ் ஸ்கோர் குறைவாக இருந்தது.

அப்போது பவுலிங் செய்த ஹேசல்வுட் ஓவரில் ஒரு சிக்ஸ், 3 பவுண்டரி உட்பட 22 ரன்களை விளாசி தள்ளினார் கேஎல் ராகுல். இதனால் ஆட்டத்தின் வெற்றி டெல்லி அணியை நோக்கி திரும்பியது. இதன்பின் ஸ்டப்ஸ்-ம் அதிரடியில் இறங்க, பவுண்டரி மற்றும் சிக்ஸ் என்று விளாசி தள்ளினார்கள். இறுதியாக யாஷ் தயாள் பவுலிங்கில் 6, 4, 6 என்று விளாசி அணியை வெற்றி பெற வைத்தார். சிறப்பாக ஆடிய கேஎல் ராகுல் 53 பந்துகளில் 93 ரன்களை விளாசி அசரடித்தார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles